தன் தனித் தன்மையை இழக்கப் போகிறதா ட்விட்டர் ?
966 total views
சமூக இணையதளங்களின் பிரச்னைகள் இருவகை:
(க) ஒன்று: எப்படி ஒரு பயனாளரை அதிக நேரம் தனது தளத்தில் இருக்கச் செய்வது?
(உ) இரண்டு: இந்த பயனாளர் கூட்டத்தை வைத்து எப்படி பணம் பண்ணுவது.
எப்பொழுது ஒரு சமூக தளம் முதலாவது பிரச்னை பற்றி மட்டும் சிந்திக்கிறதோ அப்போது பல புதிய வசதிகளை ஏற்படுத்தித் தரும். சிறிய தளமாக இருந்து பெரிய தளமாக மாறும் போது, பணம் பண்ணவேண்டிய அவசியம் தானாக ஏற்படும். இந்த இரண்டு பிரச்சனைகளையும் தனித்தனியே கையாளாமல் இரண்டையும் ஒரு சேரக் கையாளும்போது பயனர்கள் அதிருப்தியடைவார்கள்.
- ட்விட்டர் இணைய தளத்தின் சிறப்பே., வள்ளுவர் போல் குறைந்த சொற்களில் சொல்ல வந்த செய்தியை இரத்தின சுருக்கமாக சொல்வதும்.
- தான் சொல்லும் செய்தியை உலகம் முழுவதும் அதே செய்தியைத் தேடும் மக்களை நொடியில் சென்றடையச் செய்வதே ஆகும்.
நீங்கள் #swamy என தொடர்புக்குறி hash tag இட்டு ஒரு கீச்சிடும் போது (tweet) சுப்ரமணிய சாமி பற்றிய அனைத்து கீச்சுகளுடன் உங்களின் கீச்சும் சேர்ந்துவிடும். இப்படிதான் சுனாமி எச்சரிக்கை, பூகம்ப எச்சரிக்கை போன்றவற்றை ஒரே தொடர்புக் குறிக்குள் கொண்டு வந்து அனைவரும் அது பற்றிய தகவல்களை பெற வழி செய்தது ட்விட்டர். இந்த வசதியை முகநூல் தளமும் நகலெடுத்து தன் பயனர்களுக்கு வழங்கியது.
இப்பொழுது, ட்விட்டர் தனது தளத்திலும் முகநூலில் இருப்பது போல் timeline, group chat, sponsored posts மற்றும் கூகுள் தளத்தில் தேடுவது போல் hashtag மட்டுமல்லாது பொதுவான வார்த்தைகளையும் வைத்து தேடும் வசதி என அறிமுகம் செய்ய இருக்கிறார்கள் . ஒரு hashtag ஐ வைத்து தேடினால் தான் அது தொடர்பான கீச்சுக்கள் கிடைக்கும் என்பது போய் . பொது வார்த்தைகளுக்கு முக்கியத்துவம் வரும் போது, நாம் hashtag பயன்படுத்துவதன் தேவையே இல்லாமல் போய் விடும்.
hashtag முக்கியத்துவம் இல்லையென்றால், குப்பை போல் sponsored tweets நீங்கள் பின்தொடராத நபர்களிடம் இருந்து வந்தால், ட்விட்டர் ஒரு Group Chat செய்வதற்கான ஊடகமானால் பின்னர் எதற்கு ட்விட்டர் எனும் தளம் ? இதெல்லாம் முகநூல் தளத்திலேயே உள்ளதே?
Comments are closed.