ஸ்டீவ் ஜாப்ஸ் திரைப்படம் & ஆப்பிள் பங்கு விலை வீழ்ச்சி.
1,339 total views
பலராலும் விரும்பி வாங்கப்படும் iPhone, iPad , iPod, Mac ஆகியவற்றை விற்பனை செய்யும் ஆப்பிள் நிறுவனத்தின் பங்கு விலை, பல ஆண்டுகளுக்குப் பிறகு $400 க்கு கீழே விற்பனை ஆகின்றன.
அதற்கான காரணங்கள்:
1. CEO Tim Cook, Phil Schiller, Peter Oppenheimer & Craig Federighi போன்ற உயர் பதவியில் இருப்போர் அவர்களிடம் சொந்தமாக இருந்த ஆப்பிள் நிறுவன பங்குப் பத்திரங்களை சுமார் $86 மில்லியன் டாலர் அளவிற்கு விற்று பணமாக்கிக் கொண்டனர்.
2. CEO Tim Cook, இந்த வருட கிறிஸ்துமஸ் வரை எந்த புதிய பொருளும் அறிமுகப்படுத்தப் போவதில்லை என அறிவித்துள்ளார்.
கடந்த வருடம் செப்டம்பர் மாதம் $700 வரை விற்பனை ஆன ஆப்பிள் பங்கு.. இப்போது $390 என்ற அளவில் இருப்பது மாபெரும் வீழ்ச்சி.
இந்த நிலையில் ஆப்பிள் கதாநாயகன் ஸ்டீவ் ஜாப்ஸ் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை ஒரு திரைப்படமாக எடுத்துள்ளனர்.
ஏற்கனவே முகநூல் உரிமையாளர் மார்க் ஜூகற்பார்க் வாழ்க்கை ஒரு படமாக வந்துள்ளது குறிப்பிடத்தக்கது
Comments are closed.