இதயமில்லாமலும் வாழலாம் !

495

 669 total views

சின்கார்டியாவின் செயற்கை இதயத்தை மட்டுமே கொண்டு உயிர் வாழும் அதிசய நபரை பற்றிதான் பார்க்க போகிறோம் . கண்டிப்பாக நீங்கள் நினைப்பதுபோல அவர் ஒரு எந்திர மனிதன் அல்ல . சராசரி மனிதனிடம் காணப்படும் இதயமின்றி செயற்கையான ஒரு இதயத்தை கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

அமெரிக்க நாட்டைச் சேர்ந்த முன்னாள் தடகள வீரரான ஸ்டீவ் வில்லியம்ஸ் என்பவருக்கு இதயத்தசை கோளாறு இருந்ததால் அவர்  பல உடல் நல  குறைபாடுகளில் தள்ளப்பட்டிருந்தார் . வில்லியமின் உடல் நிலை மோசமான சமயத்தில்தான் அவர் ஆரஞ்சு கவுண்டி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரை பரிசோதித்த பிறகுதான் அவரது இதயம் துடிப்பு நின்றது தெரிய வந்தது. பின் அவரது மார்பின் மேல் பல அழுத்தங்களை மேற்கொண்டு 30 நிமிட போராட்டத்திற்கு பிறகு அவரை மீட்டனர். இதற்கிடையே ஒரு கட்டத்தில் அவரது மனைவியை அவர்களது 24 வருட திருமண வாழ்க்கைக்கு விடை கொடுக்க அழைத்து வரப்பட்டார்.அந்த நேரத்தில் வில்லியம் ஒரு இறந்த மனிதராகவே அனைவராலும் பார்க்கப்பட்டார் .

மருத்துவர்கள் வில்லியமின் இதயத்தை மூன்று நாட்களுக்கு கைப்பற்றி வைத்ததே பேரதிசயம் தான் . அப்போது கோமா நிலையில் இருந்த  அவரது உடல் பார்வைக்கு மட்டுமே  தென்பட்டாலும் மிகவும் சேதாரமடைந்திருந்தது .இதயமாற்று அறுவை சிகிச்சை என்ற ஒரு சிந்தனை இருப்பினும் தானம் செய்ய முன்வருபவர்கள் மிகவும் அரிதாகவே இருந்தனர்.

வில்லியம் உலகின் சில இடங்களுக்கு சென்றும் அவருக்கு தகுந்த வலி கிடைக்காததால் இறுதியாக லாஸ் ஏஞ்சல்ஸ்சின் சீடர்ஸ் சீனாய் இதய நிறுவனம் ஒரு பயமுறுத்தும் விதமான வழியைக் கூறியது. அதுதான் செயற்கை இதயம் பொருத்தும் வழி முறை . வில்லியமிற்கும் அவரது மனைவிக்கும் அச்சுறுத்தலான ஒரு வழிமுறையாகவே இருப்பினும் அவர்களுக்கு வேறு வழியின்றி ஒப்புக் கொண்டனர்.அரிசோனா கம்பெனியின் மூலம் இந்த செயற்கை இதயம் சின்கார்டியாவிர்க்கு கொண்டுவரப்பட்டது.
செயற்கை இதயம் :JohnFPeters_MECHHEART_FINALS_012.0
இந்த செயற்கை இதயம் இரண்டு செயற்கையான வென்ட்ரிக்கிள்களை கொண்டு இதய தசைகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. இது ஒரு இயற்க்கை இதயம் செய்யும் வேலைகள் அனைத்தையும் செய்கிறது . உள்ளே உள்ள காற்றளுத்ததினால் இரத்த சுழற்சிகளும் தொடர்ந்து நடைபெற்று இதயத் துடிப்பும் தொடர்ந்து நடைபெறுகிறது . இந்த சாதனத்திற்கு கண்டிப்பாக எப்போது மின்திறன் சேமிக்கப்பட்ட சக்தி வாய்ந்த சாதனம் தேவை . எப்படி மின் திறன் இல்லாமல் ஒரு சாதனத்தினை இயக்க முடியாதோ அதே போன்று மின்திறன் இல்லாமல் இதயத் துடிப்பு நின்று நோயாளிகள் உயிரிழக்கவும் நேரிடும்.மருத்துவத் துறையில் இது மாதிரியான கண்டுபிடிப்புகளால் மனிதன் செய்யும் அனைத்தையும் இயந்திரங்கள் செய்வது ஆச்சரியமான விசயமே !

JohnFPeters_MECHHEART_FINALS_010.0

தற்போது இந்த செயற்கை இதயத்தை  வில்லியம் ஒரு இதய தானம் செய்பவர் கிடைக்கும் வரை பொருத்துவதற்கு சம்மதம் தெரிவித்திருந்தார் .இறுதியாக வில்லியமிற்கு செயற்கை இதயம் பொருத்தப்பட்டு அறுவை சிகிச்சை முடிந்தது மருத்துவமனையிலிருந்து அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் அவர் எப்போதும் ஒரு பெரிய பேட்டரியை சுமந்து கொண்டே செல்ல வேண்டியிருந்தது.

அதன் பின் சில நாட்களுக்கு பின் தான் வில்லியமிற்கு  அந்த நல்ல செய்தி கிடைத்தது .
தானம் செய்ய இதயம் தயாராக உள்ளது என்பதுதான் அந்த மகிழ்ச்சிக்குரிய செய்தி ! பல வாரங்களுக்கு பின்  இதய தானம் செய்யப்பட்டு அவருடைய கஷ்ட காலத்திலிருந்து மீண்டு வந்தது அவருடைய தன்னம்பிக்கையை காட்டுவதாகவே உள்ளது .JohnFPeters_MECHHEART_FINALS_008.0

மனித உடலில் நம்பமுடியாத பல விஷயங்கள் மாற்றிக் கொள்ளலாம் என்ற ஒன்று ஆச்சரியமே! அமெரிக்காவில் 5.1மில்லியன் மக்கள் இதயக் கோளாறினால் பாதிக்கப்படுவதாக ஒரு அறிக்கை கூறுகிறது .இந்த மாதிரியான செயற்கை இதயத்தில் சில ஆபத்துகள் இருப்பினும் ஆபத்துகாலங்களில்  உயிர்வாழ இந்த மாதிரியான கண்டுபிடுப்புகள் மிகவும் அவசியமே! வளர்ந்து வரும் தொழில்நுட்ப உலகின் மருத்துவ துறையில்  இந்த சாதனை பாராட்டத்தக்கதே !

You might also like

Comments are closed.