Skype தொழில்நுட்பத்தை Microsoft கையகப்படுத்தியது
579 total views
VOIP என்று சொல்லக் கூடிய இணையத்தின் வழியே ஒருவருடன் மற்றொருவர் வீடியோ கான்ப்ரென்சிங் (video conference ) மூலம் உரையாடக் கூடிய வசதியை இலவசமாக கொடுத்து வந்த நிறுவனம் Skype. இன்று தொழில்நுட்ப ஜாம்பவாஙன்களில் ஒன்றான Microsoft ன் வசம் வந்துவிட்டது. இது வரை இல்லாத வகையில். மிகப் பெரும் தொகையான $8.5 பில்லியன் அமெரிக்க டாலர்களை கொடுத்து கையகப்படுத்தியுள்ளது.
இப்பொழுது உள்ள நிலையில் Skype நிறுவனமானது 660 மில்லியனுக்கும் மேலான மக்களால் பயன்படுத்தும் சேவையாக உள்ளது. இப்பொழுது Microsoft ன் வசம் Skype வந்துவிட்டதால் என்னவாகும் என்ற அச்சம் எழுந்துள்ளது. ஆனால் இதன் மூலம் பெரிய மாற்றங்களும் நடக்கலாம். காரணம் Microsoft மொபைல் தொழில்நுட்பத்தில் முன்னணியில் உள்ள நிறுவனமாகும். இப்பொழுது Skype சேவையை இணைப்பதன் மூலம் ஒரு பெரும் புரட்சியை ஏற்படுத்தும் திட்டம் இருப்பதை உணர முடிகிறது .
இதற்கு முன் Microsoft நிறுவனம் 1997 ல் $400 மில்லியன் அமெரிக்க டாலருக்கு Hotmail சேவையை வாங்கியது. ஆனால் பின்னாளில் வந்த மின்னஞ்சல் சேவைகளால் Hotmail சேவை பின்னுக்கு தள்ளப்பட்டது. இதே நிலைமை Skype ற்கும் ஏற்படுமோ என்று கூட என்ன தோன்றுகிறது. ஆனால் Microsoft எவ்வாறு யோசித்துள்ளது என்பது தெரியவில்லை.
எனினும் இது பெரிய முயற்சி காரணம் இதற்காக Microsoft நிறுவனம் கொடுத்துள்ள தொகை மிகப் பெரியது. அரண்மனையில் இருப்பவர் முதல் அடுப்பங்கரையில் இருப்பவர் வரை அனைவரும் உபயோகப் படுத்தும் மொபைல் சேவையில் இந்த புதிய முடிவு எவ்வாறு அமையும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Comments are closed.