facebook ல் பிரிந்து சென்ற நண்பரை கண்டுபிடியுங்கள்

370

 613 total views

தெரிந்து கொள்ளாமல் நட்பாவது, தெரிந்ததனால் விலகிப் போவது. Facebook ன் எழுதப்படாத விதி இது. ஒரு நாள் பார்க்கும் பொழுது இருந்த நண்பர்களின் எண்ணிக்கை அடுத்த நாள் இல்லாமல் போகலாம். Facebook யார் விலகினார்கள் என்பது பற்றி உங்களுக்கு தெரிவிக்காது. ஆனால் இதை வேறு முறையில் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

இதற்கு https://www.twentyfeet.com என்ற இணையதளத்திற்கு செல்லவும். இதில் நீங்கள் உறுப்பினராக இணைந்த பின்னர் உங்களுடைய Facebook அக்கவுண்டை இதில் இணைக்கவும். யாரேனும் நண்பர்கள் உங்களை விட்டு விலகினால் உங்களுடைய மின்னஞ்சலுக்கு அறிவிப்பு வந்துவிடும். ஒருவேளை அந்த நபர் Facebook ல் இருந்தே கூட விலகி இருக்கலாம்.

மேலே கூறிய முறை உங்களுக்கு புரியவில்லை எனில் http://apps.facebook.com/twentyfeet/ இந்த தொடர்பை பயன்படுத்தவும்.

குறிப்பு : இதன் மூலம் Facebook ல் ஏதாவது ஒன்றை மட்டுமே இலவசமாக எப்பொழுதும் கண்காணிக்க முடியும். அதாவது உங்களுடைய நண்பர் எண்ணிக்கை மட்டும் கண்காணிக்க விரும்பினால், அதற்கு மேல் உங்கள் Group அல்லது Fan Page ஆகியவற்றை கண்காணிக்க $2.49 கட்டணமாக ஒரு வருடத்துக்கு செலுத்த வேண்டும். எனினும் 30 நாளைக்கு எல்லா வசதிகளையும் பெறலாம் அதற்கு மேல் உபயோகப் படுத்தத்தான் மேல் சொன்ன விதிமுறை.

முக்கிய குறிப்பு : ஒரு அக்கவுண்ட்டிற்கு ஏதாவது ஒன்றை கண்காணிக்கலாம் என்றால். ஒவ்வோரு அக்கவுண்டிற்கும் ஒன்றை கண்காணிக்கலாம் தானே. பல மின்னஞ்சல் (e-mail) முகவரி வைத்திருப்பவர்களுக்கு இந்த யுத்தி உதவும்.

You might also like

Comments are closed.