Indian Railways to offer Wi-Fi on Trains
1,774 total views
இந்தியாவில் தற்பொழுது பயணங்களின் பொழுது இணையத்தை மொபைல் போனின் GPRS மூலமாகவும், டேட்டா கார்டுகளின் உதவியுடன் இணையத்தை உபயோகித்து கொண்டு வருகிறோம். ஆனால் பயணித்து கொண்டே உபயோகிப்பதால் சரியாக சிக்னல் கிடைக்காமல் இணையம் அடிக்கடி துண்டிக்கப்படும். இது பெரும்பாலானவர்களுக்கு பெரும் அவஸ்தையை கொடுத்து வந்தது.
இனி இந்திய ரயில்களில் வருகிறது Wi-Fi வசதி. கடந்த சில வருடங்களாக அனுமதிக்காக காத்து கொண்டிருந்த இந்திய ரயில்வேக்கு ISRO அனுமதி வழங்கியுள்ளது. இந்திய ரயில்களில் செயற்கை கோளில் இருந்து சிக்னலை பெரும் வகையில் ஒரு ஆன்டனாவை பொருத்தி விடுவார்கள் அதன் மூலம் நாம் அதிவேக இணையத்தை ரயிலில் பயணித்து கொண்டே உபயோகிக்கலாம்.
ரூபாய் 6.30 கோடியில் நடைமுறை படுத்தப்படும் இந்த திட்டத்திற்கு Pilot Project என பெயரிட்டு உள்ளனர். இதை முதன் முதலில் ராஜ்தானி எக்ஸ்பிரசில் சோதனை செய்ய உள்ளனர். இந்த சோதனை முயற்சியின் பொழுது நீங்கள் இந்த ரயிலில் பயணம் செய்ய நேர்ந்தால் இந்த வசதிக்காக டிக்கெட் பரிசோதகரை அணுகினால் அவர் ஒரு மொபைல் என்னை தங்களுக்கு வழங்குவார். உங்களின் மொபைலில் இருந்து அந்த நம்பருக்கு ஒரு டயல் செய்தால் Wi-Fi activate செய்வதற்கான கடவுச் சொல்லை(Password) அனுப்புவார்கள். அதன் மூலம் Wi-Fi activate செய்யப்பட்டுள்ள சாதனத்தில் இருந்து இலவசமாக இணையத்தை உபயோகித்து கொள்ளலாம். இந்த திட்டம் அனைத்து ரயில்களிலும் அமலுக்கு வந்தால் இந்தியா முழுவதும் மிகப் பெரிய வரவேற்ப்பை பெரும் என்பதில் ஐயமில்லை.
Comments are closed.