இந்தியத் தபால் துறை நவீனமயமாக்கம் – டிசிஎஸ் நிறுவனம் பெருமிதம்

384

 394 total views

இந்தியாவின் முன்னணி தகவல் தொழில் நுட்ப சேவை நிறுவனமான டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ் ( டிசிஎஸ்) நிறுவனத்துடன், இந்திய அஞ்சல் துறை கடந்த 2013 -ம் ஆண்டு பல ஆண்டுக்கான ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டது.  இதன்படி நாடு முழுவதும் உள்ள அஞ்சலகங்களில் நவீன தகவல் தொழில் நுட்ப வசதிகளை டிசிஎஸ் நிறுவனம் ஏற்படுத்தித் தர வேண்டும். இதற்காக அந்த நிறுவனம் 1,100 கோடி ரூபாயைப் பெற்றுக்கொண்டது.

வாடிக்கையாளர்கள் பயனடையும் வகையில், இந்திய அஞ்சலகங்களில் நவீன தொழில் நுட்ப வசதிகளை டிசிஎஸ் ற்படுத்தித் தர வேண்டும் என்பதே இந்த ஒப்பந்தத்தின் முக்கிய அம்சமாகும்.

இதன்படி, அஞ்சலகங்களில் மேற்கொள்ள வேண்டிய முக்கிய பணியான ‘கோர் சிஸ்டம் இன்டகரேஷன்’ (Core System Integration- CSI), டிசிஎஸ் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டு, செயல்முறைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட அஞ்சலகங்கள் ஒரே வலைப் பின்னலுக்கு உட்படுத்தப்பட்டு, நிறுவன வள திட்டமிடல் தீர்வுகள் ( ERP solution), மெயில் ஆபரேஷன்ஸ், நிதி மற்றும் கணக்கியல், மனித வளச் செயல்பாடுகள் ஆகியவற்றில் ஒருங்கிணைந்து செயல்படும்.

இந்த ஒருங்கிணைக்கப்பட்ட தீர்வு, ஐந்து லட்சம் பணியாளர்கள், ஒரே நேரத்தில் 40,000 வாடிக்கையாளர்கள், ஒரே நாளில் 30 லட்சம் அஞ்சல் பரிவர்த்தனை நடைமுறைகளுக்குத் தேவையான ஆதரவை அளிக்கும் என டிசிஎஸ் தெரிவித்துள்ளது.

இந்த நடவடிக்கை மூலம், உலகின் மிகப் பெரிய இ போஸ்டல் விநியோக வலையமைப்பைக் கொண்டதாக இந்திய தபால் துறை உருவெடுத்துள்ளது.

You might also like

Comments are closed.