இந்திய தபால் துறையை தூக்கி நிறுத்த Infosys உடன் 700 கோடியில் ஒப்பந்தம்.
1,020 total views
கைப்பேசியும் கணினியும் இல்லாத காலத்தில் தகவல் பரிமாற்றத்தின் ஒரே வழி தபால் துறை.
“ஊருக்கு போனதும் கடுதாசி போடுறேன்” என சொல்லிவிட்டு போகும் வழக்கம் சுமார் 100 ஆண்டுகள் இருந்தது. இப்போதெல்லாம்… ஒரு குறுந்தகவல் தான்….
இந்தியாவில் உள்ள 1,50,000 தபால் அலுவழகங்களிலும் தமது Finacle Core Banking & McCamish Insurance சம்பந்தப்பட்ட மென்பொருள்களை நிறுவி மற்றும் பேணிக் காக்கவும். நாடு முழுவதும் தபால் துறை சார்பாக 1000 தானியங்கி பணப் பட்டுவாடா (ATM) இயந்திரங்களை நிறுவவும் சுமார் 700 கோடி ரூபாய் அளவில் ஒரு ஒப்பந்தததை இந்தியாவின் இரண்டாவது முன்னணி மென்பொருள் நிறுவனமான Infosys உடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
பெருகி வரும் தனியார் நிறுவனங்களுடன் போட்டியிட்டு சிறந்த சேவையை அளிக்க முன்வந்திருக்கும் தபால் துறைக்கு நமது பாராட்டுகள்.
குறிப்பு: நான் பிறந்தததை அறிவிக்கும் பொருட்டு என் அம்மாவின் அப்பா (தாத்தா) என் அப்பாவின் அப்பாவிற்கு (ஐயா) எழுதிய அந்த நான்கு முனைகளிலும் மஞ்சள் தடவிய “INLAND LETTER” என்னிடம் தான் இப்போது உள்ளது 🙂
Comments are closed.