​ஓட்டை காலணாவை பல கோடி ருபாய்​ ​ கொடுத்து வாங்கிய கூகள் நிறுவனம்.

710

 2,513 total views

கடந்த வாரம்  கூகள்  நிறுவனம்  ஒரு சிறிய  நிறுவனத்தை  ​​3.2 பில்லியன்  அமெரிக்க டாலர்களைக் கொடுத்து வாங்கியது. ​​ இது  தகவல்  தொழில்நுட்பத் ​
​துறையில் இருக்கும் அனைவரையும் மிகவும் ஆச்சர்யப்பட  வைத்த ஒரு வர்த்தகம்.
ஆம்,  வீட்டினுள்  இருக்கும் தட்பவெட்ப  நிலை  போன்றவற்றை  அறிவிக்கும்  இரண்டு  அங்குல  விட்டமே  இருக்கும் ஒரு சாதனத்தை
தயாரிக்கும்  நெஸ்ட்  (Nest) என்ற  நிறுவனத்தை  மிக மிக அதிக விலை கொடுத்து  ரொக்கமாகக்   (திருடா திருடா படத்தில் வரும் லாரியை  நினைவில் கொள்ளவும்) ​
​ கொடுத்து  வாங்கியது.  TechTamil Karthi
வீட்டில்  தீப்பிடித்தால்  எச்சரிக்கை செய்வது, பூட்டிய வீட்டில்  ஆள்  நடமாட்டம்  இருந்தால் எச்சரிக்கை செய்வது போன்ற செயல்களை முதன்மையாகச் செய்யும்  இந்தப்  பெட்டியை  கூகிள் ஆர்வமாக வங்கியுள்ளது பல  சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே அமெரிக்க  புலனாய்வு  நிறுவனம்  அனைத்து  பெரிய  தகவல் தொழில்நுட்ப  நிறுவனங்களிடம்  இருந்து அதன் அனைத்து  பயனாளர்  விவரங்களை  உளவு  பார்த்து வருகிறது. இந்த நிலையில் கூகல் 24 மணி நேரமும் நம்  வீட்டை கண்காணிக்கும்  ஒரு  பொருளை  நம்  வீடுகளில்  (இப்பொழுதைக்கு  அமெரிக்காவில் இருக்கும் உங்கள் பெரியப்பா  வீடு எனலாம் ) மாட்டும் போது.
அது  அமெரிக்க  புலனாய்வு  நிறுவனம்  மறைமுகமாக யார்  எந்த வீட்டில்  எப்போது இருக்கிறார், ஆள் எத்தனை  நாளாக  வீட்டில் இல்லை  போன்ற விவரங்களை சேகரிப்பது போல் ஆகிவிடும். இதனால்  தனி மனித சுதந்திரம் என்ற ஒன்றே இல்லாமல் போய்  விடும்  என கருத்து  தெரிவிகிறார்கள்.

தங்கக்  குடம்  எப்படி  மண்  குடமானது?

இத்தனை  கோடி  டாலர்  கொடுத்து வாங்கிய  ஒரு பொருளை , சரோசா  தேவி  பயன்படுத்திய  சோப்பு டப்பா  எனும் அளவில்  சொல்லும் விதமாக  நேற்று  ஒருவர்  Nest போன்ற ஒரு பொருளை புதிதாக உருவாக்கி    ” திறந்த நிரல் மூல “​ ​ (Opensource) ஆக  வெளியிட்டு  கலவரத்தை  ஏற்படுத்தியுள்ளார். சந்தையில்  கிடைக்கும் பொருள்களை வைத்தே  உருவாக்கிய இந்த  பொருளை  யாராலும்  லினக்ஸ்  போல்  மேம்படுத்த முடியும்.
இது  நெஸ்ட்  செய்யும்  அனேக  வேலைகளையும், அதே மாதிரியான  இயக்கு நிரல்  (OS) கொண்டு உருவாக்கியுள்ளார்.
ஒரே  நாளில்  புதிதாக  மற்ற  நிறுவனங்களால்  உருவாக்கக் கூடிய  ஒரு பொருளை வாங்கி ஒரே  வாரத்தில் மீளாத் தோல்வியில்  துவண்டுள்ளது  கூகள்.குறிப்பு : கூகள்  நிறுவனம்  முழுமையாக எந்த ஒரு புதிய கண்டுபிடிப்பையும் பெரிதாக  செய்யவில்லை., அதன் அனைத்து  தயாரிப்புகளும்  விலை கொடுத்து வாங்கி  தங்கள் நிறுவனத்துடன் இணைத்துக் கொண்டவையே.

You might also like
1 Comment
  1. tamizhan says

    அணைத்து பதிவுகளும் மிகவும் அருமையாக உள்ளது. உங்களுடைய சேவை தொடர வாழ்த்துகள். மேலும் தமிழக செய்திகள் மற்றும் உலக செய்திகளை அறிய தமிழன்குரல் இணையதளத்தை பார்க்கவும். http://tamizhankural.com

Comments are closed.