உங்கள் Search Engineஐ பிற சேவைகளில் இருந்து பிரித்து வையுங்கள் : கூகிலுக்கு ஆணையிடும் ஐரோப்பிய யூனியன். ​

556

 1,513 total views

இணையத்தின் தலை வாசல் கதவாக இருக்கும் கூகல் தேடு பொறி,
​ தனது வளர்ச்சியின் முக்கியமான கால கட்டத்தில் உள்ளது. தேடு பொறி தவிர்த்து பற்பல சேவைகளை வழங்கி வருகிறது. YouTube, Google Drive, Gmail, Google Apps, Android OS, Google Maps, Google Shopping, Google Books, Google Groups, Google Transliterate, Google Adwords, Google Adsense, Hangouts, Google +, Google Classroom , reCaptcha, Analytics, Chrome OS, Chrome, Google TV, Google Earth, Picasa, Blogger, Google Wallet, Driverless Cars, Nest & etc.

ஒரு பயனர் கூகள் நிறுவனத்தின் எந்த ஒரு சேவையை பயன்படுத்தினாலும் , அவர் என்ன மாதிரி பயன்படுத்துகிறார் என்பதை கூகல் கண்காணித்துக் கொண்டே இருக்கும். அவரின் பயன்பாட்டைப் பொறுத்து தனது தலத்தில் தேடல் முடிவுகளைத் தரும்.

எதை பற்றியும் கவலைப்படாத நம் நாட்டில் உள்ள மக்களுக்கு இது பிரச்சனையில்லை. தனது தனிப்பட்ட விவரங்களை மதித்து, தான் கண்காணிக்கபடுவதை விரும்பாத மேற்கத்திய நாடுகளில் உள்ளோர்., தங்களின் எந்தெந்த விவரங்களை எல்லாம் கூகள் சேகரிக்கிறது எனத் தெரிய பல வழக்குகள் தொடுத்தனர்.

இதில், ஐரோப்பாவில் மட்டும் கடந்த 7 வருடங்களில் பல வழக்குகள் தொடுக்கப்பட்டன. இந்த மாதிரியான வழக்குகளின் பெயர்  “Anti Trust” வழக்குகள். முகநூல் தளம் அழிக்கப்பட்ட புகைப்படங்களின் நகல்களை தங்களின் செர்வர்களில் வைத்திருந்தது., மைக்ரோசாப்ட் நிறுவனம் Internet Explorer உலவியை Windows 7இல் முன்னரே பதிந்து வழங்குவது (Pre Installed) என பல பிரச்சனைகள் துவங்கியது ஐரோப்பாவில் தான்.

இணையத்தில் ஒன்றைத் தேடுவது என்பதும், கூகளின் பிற சேவைகள் பயன்படுத்துவதும் இரண்டாகப் பிரிக்கப்பட வேண்டும். அப்போது தான் ஒருவர் ரசனை, இணையப்  பயன்பாடு போன்றவை கண்காணிக்கபடாமல் நடுநிலையான தேடல் முடிவுகள் தேடு பொறி கொடுக்கும் என ஆணையிட்டுள்ளனர்.

இது தொடர்பாக தனது பதிலை இன்னும் கூகள் சொல்லவில்லை. ஐரோப்பாவில் இருந்து வரும் தனது வருமானத்தில் 90% தேடு பொறி மற்றும் அதன் விளம்பரங்கள் மூலமே வருகிறது. எனவே தனது ஒட்டு மொத்த கட்டமைப்பையும் கூகல் மாற்றுமா என பொறுத்திருந்து பாப்போம்.

இது நடந்தால் SEO செய்பவர்களுக்கும் ஒருவகையில் நன்மையே.
கூகலுக்கு போட்டியான பிற Search Engineகள்

https://duckduckgo.com

You might also like

Comments are closed.