கூகுள் மேப்ஸ் புதிய அப்டேட்

844

 716 total views

கூகுள்  நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ சேவையான கூகுள் மேப்ஸ் செயலியில் புதிய அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது.இந்த புதிய அம்சம் மூலம் பயனர்கள் கூகுள் மேப்ஸ் செயலியில் இருந்து நாம் தேடும் நபரை எளிதில் கண்டுகொள்ளலாம்.

நாம் முன் பின் தெரியாத நபரை அல்லது வெளியூரில் ஒருவரை சந்திக்க வேண்டுமெனில் ஒரு 10 முறையாவது கால் செய்து விடுவோம் நீங்க எங்க இருக்கீங்க அங்கதான் நானும் இருக்கேன் ஒரு வழியாக தேடுவதற்குள் பெரும் பாடாகிவிடும்.இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இப்போது கூகுள் மேப்ஸ் புதிய  அப்டேட்ஐ வழங்கியுள்ளது.

எப்படி செயல்படும்

நீங்கள் தேடும் நபரை கண்டுபிடிக்க  இப்போது கூகுள் மேப்ஸ் உங்களுக்கு உதவும் .

நாம் எங்கு செல்கிறோம் என கண்டறிய கூகுள்  மேப்ஸ் இல் உங்கள் real time location ஐ ஆன் செய்வதன் மூலம் நீங்கள் எங்கு இருக்கீர்கள் என்பதை நீங்கள் உங்கள் location ஐ ஷேர் செய்த நபருக்கு காட்டும்.

எனவே நீங்கள் எங்கு செல்கிறீர்கள் என்பதைப் பார்க்கவும், நீங்கள் நகரும் போதும், உங்கள் இடத்திற்கு செல்லவும். ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு உங்கள் பயண முன்னேற்றத்தில் நம்பகமான நபர் தகவல்களை வைத்திருப்பதற்கு நீங்கள் இந்த அம்சத்தை பயன்படுத்தலாம்.

எப்படி பயன்படுத்துவது

உங்கள் இருப்பிடத்தை யாராவது கண்காணிக்க வேண்டும் என்று நீங்கள் விருப்பினால்.

  • உங்கள் iOS அல்லது Android சாதனத்தில் Maps பயன்பாட்டைத் திறக்கவும் பின்பு blue dot பட்டன் ஐ கிளிக் செய்யவும் பின்பு “share location” செலக்ட் செய்யவும்.  
  • மேலும் குறிப்பிட்ட நேரத்திற்கு உங்கள் இருப்பிடத்தைப் பகிர்ந்து கொள்ள விரும்பினால், “1 மணிநேர” விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து, பின்னர் தேவைப்படும் நேரத்தை அதிகரிக்க அல்லது குறைக்க நீல “+”மற்றும் “-”  பட்டன் ஐபயன்படுத்தவும்.நீங்கள் இதை off செய்யும் வரை உங்கள் லொகேஷன் பகிரப்படும்.
  • நாம் யாரிடம் locationஐ ஷேர் செய்ய வேண்டும் என்பதை “கான்டக்ட்ஸ்” மூலம்  செலக்ட் செய்யலாம் அல்லது ஓர் ஆப் (ஜிமெயில்,message)மூலம் link ஐ பகிரலாம்.
  • உங்கள் இருப்பிடத்தை நீங்கள் பகிரும் நபருக்கு, அவர்களின் தொலைபேசியில் மெசேஜ் மூலம்  ஒரு அறிவிப்பு வழங்கப்படும்.

       பயனர்கள் இதை பயன்படுத்தி பயனடையலாம் எனஅறிவித்துள்ளது.

You might also like

Comments are closed.