Free WinMob7 Handsets for All Microsoft Employees!
734 total views
கணினி மென்பொருள் சக்கரவர்த்தி மைக்ரோஸாஃப்ட் நிறுவனம் கைபேசி மென்பொருள் சந்தையைக் கைப்பற்ற எந்த ஒரு முயற்சியும் முழு வீச்சில் எடுக்கவில்லை.
பில்கேட்ஸ் ஓய்வு பெற்று ஸ்டீவ் பால்மர் தலைமைப் பொறுப்பில் வந்தவுடன் விண்டோஸ் 7 பதிப்பை வெற்றிகரமாக விற்பனை செய்து முத்திரை பதித்தார்.
கைபேசி சந்தையின் நாட்டாமை ஐயா நிறுவனங்கள் ஆப்பிள் மற்றும் கூகளின் சந்தையை அசைத்துப் பார்க்க மைக்ரோஸாஃப்ட் நிறுவனம் முடிவு செய்தது. அதன் முதல் படியாக, “Windows Mobile 6 Edition” ஐ குப்பையில் போட முடிவு செய்தது.,
அடுத்தபடியாக, முற்றிலும் வித்தியாசமான பயனாளர் முகப்பு (User Interface) மற்றும் அடிப்படை கட்டமைப்பை மையமாகக் கொண்ட WinMob7 கைபேசி OS ஐ இந்த வருடம் அறிமுகப்படுத்தி உள்ளது.
ஆப்பிள் மற்றும் கூகள் ஆன்ட்ராய்டு OSல் இருக்கும் “App Market” எனப்படும் சிறிய மென்பொருள் விற்பனை மையம் போன்ற ஒரு அமைப்பை WinMob7லும் அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது.,
இதன் மூலம் யார் வேண்டுமானாலும் ஒரு WinMob7 Application எழுதி அதை மைக்ரோஸாஃப்ட் நிறுவனத்தின் App Marketல் விற்பனை செய்து பணம் சம்பாதிக்கலாம்.
இதை ஊக்குவிக்கும் விதமாக, தனது நிறுவன ஊழியர்கள் அனைவருக்கும் இலவசமாக ஒரு WinMob7 பதியப்பட்ட உயர்தர கைப்பேசியை இலவசமாக வழங்கியுள்ளது. அவர்களை தங்கள் ஓய்வு நேரங்களை WinMob7 Application எழுதி பகுதிநேரமாக சம்பாதிக்கவும் வழி வகை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.
Comments are closed.