Fake Facebook கணக்குகள் அழிக்கப்பட இருக்கின்றன.

540

 1,676 total views

அடுத்தவரை சுதந்திரமாக திட்ட பலரும் போலி கணக்குகளை உருவாக்கி அனைத்து வேலைகளிலும் ஈடுபடுவர்.

சிலர், தங்களின் நிலை தகவல்களுக்கு தாங்களே ஒரு போலி கணக்கில் இருந்து லைக் போட்டு, பின்னர் ஆகா ஓகோ என தம்மைத் தாமே புகழ்ந்து வருவர்.

ஆனால், சில வர்த்தக நிறுவனங்கள் தமக்கென ஒரு Facebook page வைத்திருப்பார்கள். உதாரணத்திற்கு “Mannar & Co” . அவர்கள் ஒரு தொகையை மாதா மாதம் “Social Marketing” நிறுவனங்களுக்கு கொடுப்பர். இந்த Social marketing நிறுவனங்களின் வேலை என்னவென்றால், நமது மன்னார் பக்கத்தை பல மக்களிடம் கொண்டு சேர்த்து அவர்களை லைக் செய்ய வைப்பது தான்.

ஆனால், நாம் மன்னார் பக்கத்தை ஒரு பொருட்டாகக் கூட மதிக்க மாட்டோம். எனவே அவர்கள்.. எங்களைப் போன்ற Web Development நிறுவனங்களை அணுகி ஒரு எந்திர நிரலை (Bot Script) எழுதச் சொல்வார்கள்.

இதன் வேலை, ஆயிரக் கணக்கான புதிய போலி கணக்குகளை நிமிடங்களில் உருவாக்கி; மன்னார் பக்கத்தில் சில ஆயிரம் லைக்குகள் கொடுப்பர். அது மட்டுமல்லாது பல Social Marketing நிறுவனங்களிடம் சென்று, நாங்கள் உங்களின் வாடிக்கையாளர் பக்கத்தில் ஒரு லட்சம் லைக் கொடுக்க இவ்வளவு பணம் தாருங்கள் என பேரம் பேசுவர்.

போலி கணக்குகள் பெரும்பாலும் உண்மையான மனிதரின் புகைப்படம் அல்லது அமலா பால் போன்ற படங்களே இருக்கும். அவர்களுக்கு நண்பர்களும் அதிகமாக இருக்க மாட்டார்கள்.

இது போன்ற போலி கணக்குகள் கொடுக்கும் லைக்; Facebookல் இருக்கும் பணம் கட்டி பக்கங்களையும் விளம்பரங்களையும் கொடுக்கும் நிறுவனங்களை அதிருப்தியில் ஆழ்த்ியுள்ளன.

எனவே., போலி கணக்குகளை முடக்க பல வழிகளை யோசித்து வருகிறது Facebook. அதன் முதல் படியாக, சந்தேகமுள்ள கணக்கு வைத்திருப்போர்க்கு தொலைபேசியில் அழைத்து அவர்களின் விவரங்களை சரி பார்க்க முடிவு செய்துள்ளனர்.

ஆனால், சில விசமிகள் சக பயனாளார்களுக்கு போன் போட்டு அவர்களை ஏமாற்றவும் செய்துவிடுவார்கள். எனவே Facebook மிகவும் எச்சரிக்கையாக இதை கையாளும் என நம்புவோம்.

You might also like

Comments are closed.