Facebook-ல் இலவசமாக வருகிறது Angry Birds விளையாட்டு
1,144 total views
கடந்த ஆண்டு வெளிவந்து உலகம் முழுவதும் வெற்றி நடை போட்ட விளையாட்டு Angry Birds விளையாட்டாகும். இந்த விளையாட்டில் பல versions வந்து விட்டது. உலகம் முழுவதும் 500மில்லியன் முறை இந்த விளையாட்டு download செய்யப்பட்டுள்ளது. முதலில் மொபைல்களுக்காக வடிவமைக்கப்பட்டு பின்னர் கணினிகளுக்கும் வந்தது. அடுத்து சமூக தளங்களில் முதல் முறையாக Google +ல் அறிமுகம் செய்யப்பட Angry Birds விளையாட்டு இப்பொழுது மிகப்பிரபலமான சமூக இணையதளமான Facebook-ல் வர இருக்கிறது. வரும் காதலர் தினத்தன்று Facebook-ல் Angry Birds விளையாட்டை அனைவரும் விளையாடி மகிழலாம்.
மொபைலில் விளையாடும் Angry Birds விளையாட்டை விட Facebook-ல் வரப்போகும் விளையாட்டில் சுவாரஸ்யம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்க படுகிறது.
https://www.facebook.com/angrybirds சென்று Like செய்தால் Angry Birds விளையாட்டு வெளிவந்தவுடன் அதற்கான அழைப்பு உங்களுக்கு அனுப்பப்படும்.
இனி நண்பர்களுடன் அரட்டை அடித்து கொண்டே Angry Birds விளையாட்டை விளையாடி மகிழலாம்.
இதன் ட்ரெயிலர் காண கீழே உள்ள வீடியோவை பாருங்கள்.
Comments are closed.