150 ஆண்டுகளுக்குப் பின்னர் இருவழிப் பாதையானது சூயஸ் கால்வாய்
2,856 total views
நல்ல புத்தகம் ஒன்று வாசித்துக் கொண்டிருக்கிறேன்., இடையே வந்த சந்தேகம் கடந்த சில நூற்றாண்டுகளில் பிரிட்டனின் பொருளாதார ஆளுமை இந்தியாவில் மிக வேகமாக வளர ஆப்பிரிக்காவைச் சுற்றி வரும்
கடல்வழிப் பாதை தடையாக இருந்திருக்குமே என யோசித்து சூயஸ் கால்வாயை எப்பொழுது தோண்டினார்கள் எனத் தேடினேன். கிட்டத்தட்ட கடந்த நாலாயிரம் (ஆம்) ஆண்டுகளாக பல பேரரசுகள் செங்கடலையும் எகிப்தின் ஏரிகளையும் கால்வாய் கொண்டு இணைக்க பல முறை முயன்று வந்துள்ளனர். இந்தியாவில் இருந்து பயணிகள், மூலப் பொருட்கள் சூயஸ் வரை கப்பலில் கொண்டு சென்று பின்னர் தரை (ரயில்) வழியாக அலேசாண்ட்ரியா துறைமுகம் வரை கொண்டு சென்று பின்னர் செங்கடலில் உள்ள கப்பல்களில் ஏற்றி இங்கிலாந்து செல்லுமாம்.

சூயஸ் கால்வாய்/துறைமுகம்/செங்கடல் ஒரு தொடர் போர்களங்களின் மைய அச்சாக கடந்த நாற்பது நூற்றாண்டுகள் இருந்துள்ளது . எதேச்சையாக தற்போதைய புதிய செய்தி ஏதும் உண்டா எனத் தேடினால் கடந்த எட்டு மணிநேரங்களுக்கு முன்னர் சூயஸ் கால்வாயை 150 வருடங்களுக்குப் பின்னர் இருவழிப் பாதையாக மாற்றும் பணிகள் முடிந்து(12 மாதப் பணிகள்) முதல் சோதனை ஓட்டக் கப்பல் வெற்றிகரமாக சோதனை செய்து பார்க்கப்பட்டது எனும் செய்தி வந்துள்ளது. 72 கிலோ மீட்டர் நீளம் உள்ள கால்வாயை இருவழிப் பாதையாகவும் பெரும் பாரம் கொண்ட கப்பல்களையும் கடக்க வசதியாக ஆழமாகவும் தோண்டியுள்ளனர். எகிப்து அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சூயஸ் கால்வாயில் ஒரு நாளில் இது வரை 49 கப்பல்கள் மட்டுமே கடக்க முடியும் இனி இது இரு மடங்காக 93 கப்பல்களாக உயரும். பயண நேரம் 11 மணி நேரமாக(முன்னர் 22 மணிநேரம்) இருக்கும் எனத் தெரிகிறது. உலகின் ஒட்டு மொத்த கடல் வணிகத்தில் 8 சதவீதம் இந்த கால்வாய் வழியே நடக்கிறது. ஆண்டுக்கு 5 பில்லியன் டாலர் வருமானம் ஈட்டித் தந்த ஒருவழிப் பாதை இனி 15 பில்லியன் டாலர் ஈட்டும் என எதிர்பார்கிறார்கள்.
துணை செய்தி 1: உப்புத் தன்மை அதிகம் கொண்ட செங்கடலில் உள்ள தாவரங்கள், உயிரினங்கள் கால்வாய் வழியாக வந்து மறுபுறம் உள்ள மேடிட்டேரன் கடலில் உள்ள உயிரினங்களை ஆக்கிரமித்து அழிக்கிறது எனும் பிரச்னை உள்ளது.
துணைச் செய்தி 2: உருகி வரும் ஆர்டிக் கடலால் “வடக்கு கடல் பாதை” வழியே எளிதாக ஐரோப்பா , ஆசியா, அமெரிக்காவை இணைக்கலாம் எனும் புதிய சிந்தனை கடந்த சில ஆண்டுகளாக உள்ளது.
Comments are closed.