இன்று புகழ்வோம், இன்று முதலே பின்பற்றுவோம் அப்துல் கலாமை!

608

 1,386 total views

எளிமையான அப்துல் கலாம் அவர்கள் தன்னை பற்றி பிறர் புகழ்ந்து கொண்டு மட்டுமே இருப்பதை எப்போழுதும் விரும்பியதில்லை. அவரின் எண்ணங்கள் , கனவுகளை நினைவாக்குவதே அவருக்கு நாம் செய்யும்  மரியாதை. ​
​1. ​​அப்துல் கலாம் அவர்களின் விருப்பமான “மரண தண்டனை ஒழிப்புக்காக” குரல் கொடுங்கள். ​

2. தமிழ் மொழி வழிக் கல்வியில் பயின்று சாதனை படைத்த அவரை முன் மாதிரியாகக் கொண்டு நம் குழந்தைகளையும் தமிழ் மொழி வழி  (தாய் மொழி வழி) கல்வியில் படிக்க வைப்போம்.

3. கனவு காணுங்கள் என சொன்னார். நம் குழந்தைகள் அவர்களின் கனவுத்  துறையில் படிக்க, சாதிக்க, வேலை செய்ய உரிமை கொடுங்கள். உங்கள் கனவுகளை குழந்தைகளின் மீது திணிக்காதீர்கள்.

4. பிழையை பிழை என ஏற்பதுவே அறிவியல், அணுவுலைகளின் பிழை/தீமைகளை உணருங்கள்.
5. குழந்தைகளை நேசித்த அப்துல் கலாம் வாழ்ந்த கடற்கரையின் மறுபுறம் படுகொலை செய்யப்பட்ட 30000 ஈழத்  தமிழ் குழந்தைகளின் கொலைக்கான நீதிக்காக “பொது வாக்கெடுப்பு” துணை நில்லுங்கள்.

 

You might also like

Comments are closed.