உங்கள் பழைய ஸ்மார்ட் போன்களின் உதவி கொண்டு அமேசான் மழைக்காடுகளை காப்பாற்றலாம்:
நம்மில் பலர் இயற்கை சூழல் மாசுபடுவதை பற்றி யோசிப்போம் . ஆனால் அதற்கான நடவடிக்கைககளை எவ்வாறு செய்வது என்று பேசுவதோடு நிறுத்தி விடுவோம் .அதற்கான தகுந்த தீர்வுகளை காண்பதே இல்லை. நம்மால் முடியவில்லை என்றாலும் நமது பழைய மொபைல் போன் சுற்றுசூழலை அச்சுறுத்தும் பல செயல்களிலிருந்து நம்மைக் காக்க உதவும் காவலானாக மாறத் தயாராக உள்ளது.
காடுகள் அழிவதிலிருந்து எப்படி காக்கும் ?
முதலில் பழையதும் உங்களுக்கு வேண்டாததுமான ஸ்மார்ட் போன்களை எடுத்துக் கொண்டு அதன் அனைத்து நினைவகத்தையும் நீக்கி விட்டு அதனை ரீப்ரோக்ரம் செய்துவிட்டு பின் சோலார் பேனலில் பொருத்தப்படுகிறது . மரத்தின் உயரத்தில் பதுக்கி வைத்து அதன் பின் அதில் அதிக சக்தி கொண்ட மைக்ரோ போன்கள் மற்றும் கூடுதல் ஆண்டனாக்களும் பொருத்தப்படுகின்றன. இந்த மைக்ரோ போன்கள் மரத்தை அறுக்கும் சப்தங்களை அறியுமளவிற்கு சிறப்புகள் செய்யப்பட்டுள்ளன .
இதனால் மரத்தை வெட்டும்போது வரும் ஒலிகளின் போது ஸ்மார்ட் போன்களை கொண்டு அருகிலிருக்கும் வனத்துறைக்கு உடனே தகவல் அளிக்கும்படி செய்யப்பட்டுள்ளது. தகவல் கிடைத்தும் வனத்துறை அதிகாரிகள் அத்துமீறி காட்டிற்குள் நுழைபவர்களின் செயல்களை சில நிமிடங்களுக்குள்ளேயே கண்டறிந்து தடுக்க முடியும். ஒரு சிறு மாற்றியமைக்கப்பட்ட ஸ்மார்ட் போனின் துணை கொண்டு 300 ஹேக்டேர் பரப்பளவு வரை காக்குமளவிற்கு செய்யலாம்.
இந்த ஸ்மார்ட் போன் பாதுகாவலனை தற்போது பிரேசில் ,சுமத்திரா , கேமரூன் போன்ற பகுதிகளில் செயல்படுத்தி வருகின்றனர். அடுத்த வருடத்திற்குள் மற்ற நாடுகளுக்கும் விரிவுபடுத்தும் நோக்கில் உள்ளனர்.
Comments are closed.