பெப்சி அறிமுகபடுத்தியுள்ள மலிவான விலைக் கொண்ட அன்ராய்டு போன் :

0 50

குளிர்பானம் தயாரிக்கும் நிறுவனமான பெப்சி அதன் தயாரிப்பில் முதல் முறையாக அன்ட்ராய்டு சாதனத்தை வெளியிடுவதற்கான அறிவிப்பை கடந்த மாதம் வெளியிட்டிருந்தது. ஆனால் இந்த போனை சொந்தமாக தயாரிக்காமல் ஒரு பிரபலாமான மொபைல் சாதனம் தயாரிக்கும் முன்னனி நிறுவனத்துடன் கூட்டு சேரப் போவதாக மட்டுமே தெரிவித்திருந்தது. தற்போது இறுதியாக பெப்சி அதன் புதிய போனை சீனாவிற்கு அறிமுகபடுத்த உள்ள தகவலை பகிர்ந்துள்ளது .

இந்த போனில் பெப்சியின் வழக்கமான லோகோவே பொறிக்கப்பட்டிருக்கும் . பெப்சி நிறுவனம் சீன சந்தையில் ஒரு பெரிய வசூலை ஈட்டும் பிரத்யேக நோக்கில் கூபே நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளது.

 சிறப்பம்சம்:
பெப்சி போன் 5.5 அங்குலத்துடன் 1080p திரையுடன் 1.7GHZ ஆக்டா கோர் செயலிகளையும் கொண்டு இயங்கவல்லது . மேலும் 5MP முன் காமிராவையும் 13MP பின் காமிராவையும் கொண்டுள்ளது . கூடவே கைரேகை சரிபார்க்கும் சென்சார்களையும் கொண்டுள்ளது.

இது சில்வர் , நீலம், மற்றும் தங்க நிறங்களில் 2 வகை பதிப்புகளில் அறிமுகபடுத்த உள்ளது.
அவை P1 AU$108/US$78/£51 (குறிப்பிட்ட அளவே கொண்ட இந்த பதிப்பு முன்னதாகவே விற்று தீர்ந்து விட்டது ) மற்றும் P1s AU$153/US$110/£72 (இவை இன்னும் விற்பனைக்கு உள்ளன )ஆகும். பெப்சியின் இந்த அன்றாய்டு சாதனம் மலிவான விலையைக் கொண்டிருப்பதால் சாமானிய மக்களும் வாங்கி உபயோகிக்க வாய்ப்புள்ளது. மேலும் அண்ட்ராய்டு சாதனங்களை குளிர்பான நிறுவனம் வெளியிட்டுள்ளது இதுவே முதல் முறையாகும்.இதனால் இதன் வெற்றிக்கு பின் பல முன்னணி நிருவனங்களும் மொபைல் சாதன தயாரிப்பில் ஈடுபடும் என எதிர்பார்க்கலாம்.

You might also like

Leave A Reply