package registry serviceயை git hub தொடங்கியுள்ளது

700

 695 total views

மைக்ரோசாப்ட் இன் git hub இல்,முழு மூல நிரலை (sourcecode ) பதிவேற்ற GitHub தளத்தை பலரும் பயன்படுத்தி வருகின்றனர்.மேலும் இந்த GitHub தளத்தில் நீங்கள் ஆயிரகணக்கான Opensource மென்பொருள்களின் மூல நிரலை பார்க்கலாம்.​ தற்போது இந்த தளத்தில் GitHub Package Registry சேவையை தொடங்கியுள்ளது.இந்த சேவை sourcecodeக்கு அடுத்தபடியாக தனியார் அல்லது பொது மென்பொருள் தொகுப்புகளை வெளியிட டெவலப்பர்களுக்கு உதவுகிறது.

இது ஏற்கனவே இருக்கும் சேவையுடன் npmjs.org, rubygems.org, அல்லது hub.docker.com இணக்கமாக செயல்படும்.GitHub Package Registry ஆனது பொதுவான தொகுப்பு மேலாண்மை வாடிக்கையாளர்களுக்கு இணக்கமாக உள்ளது, எனவே உங்கள் விருப்பத்தேர்வுகளுடன் தொகுப்புகளை வெளியிடலாம்.

மேலும் இந்த புதிய சேவை சிறிய மற்றும் நடுத்தர தொழில்நுட்ப மேம்பாட்டு நிறுவனங்களுக்கும் , ஊழியர்களுக்கும்  குறியீட்டு மற்றும் மென்பொருள் தொகுப்புகளை நிர்வகிக்க உதவுகிறது. இந்த வசதி பயனர்கள் அங்கீகரிக்கப்பட்ட தொகுப்புகளை உருவாக்க உதவுகிறது. இத்துடன்,பயனர்கள் GitHub இல் எந்த குறிப்பிட்ட தொகுப்புகளின் பதிவிறக்க புள்ளிவிவரத்தையும் வரலாற்றையும் சரிபார்க்கலாம்.

GitHub டெவலப்பர்களுக்காக வடிவமைக்கப்பட்ட பல புதிய அம்சங்களையும் திறன்களையும் சேர்த்துள்ளது.மைக்ரோசாப்ட்
விஷுவல் ஸ்டுடியோ மற்றும் அசூர் கிளவுட் ஆகியவற்றில் தடையற்ற     ஒருங்கிணைப்பை உறுதிசெய்யும் வகையில் அனைத்து புதிய அம்சங்களும் உள்ளன என கூறியுள்ளது.


You might also like

Comments are closed.