டுவீட்டரையும் வைனையும் இணைக்கலாம்!
399 total views
டுவீட்டரின் கணக்கையும் வைன்னின் கணக்கையும் இணைப்பதால் உங்களுக்கு விருப்பமான நபரையும் ஆர்வலர்களையும் இனி நீங்கள் டுவிட்டரிலும் வைன்னிலும் பார்க்கலாம். என்னதான் டுவிட்டர் வைனைக் கொண்டிருந்தாலும் இந்த இரண்டும் தனித்தனியாக அதன் சேவையை செய்து வந்தது.அனால் தற்போது சற்றே மாறியுள்ளது. அதாவது நீங்கள் உங்கள் வைன் கணக்கையும் டுவிட்டர் கணக்கையும் சேர்த்தால் அது உங்கள் த்விட்டேர் கணக்கை வைனில் காட்டும் புதிய நுட்பத்தை உருவாக்கியுள்ளனர்.
வைன்:
இப்போது வைன் மற்றும் டுவிட்டர் கணக்கினை இணைப்பதினால் உங்கள் டுவிட்டரின் யுசரின் பெயர்கள் வைனில் தெரியும் இதனால் வைனிலேயே மக்கள் டுவிட்டர் பயனர்களை கண்டறியலாம்.உதாரணமாக யாரவது வைனில் உங்கள் டுவிட்டரின் கணக்கில் டேப் செய்தால் அது நேரடியாக டுவிட்டர் கணக்கிற்கு செல்லும் .
டுவிட்டர் ;
ஒரு புதிய அமைப்பில் நீங்கள் வைன் கணக்கை டுவிட்டர் சுயவிவரத்தில் தெரியும்படி அமைக்கலாம். இதனால் பயனர்கள் உங்கள் டுவிட்டர் பக்கத்தில் செல்லும்போது வைன் கணக்கை காணலாம்.இந்த லின்கை தொடும்போது அது நேரடியாக உங்களை வைன் கணக்கிற்கு கொண்டு செல்கிறது. .இது ஒரு சுற்று போல டுவிட்டருக்கு பல பயனர்களை பெற்று தரும்.மேலும் உங்களுக்கு விருப்பமானவர்கள் மற்றும் ஆர்வலர்களை லைன் மற்றும் டுவிட்டர் இரண்டிலும் காண ஒரு எளிதான வழியை உருவாக்கியுள்ளது.
Comments are closed.