634 total views
மத்திய தகவல் ஆணையம் நுகர்வோரின் பாதுகாப்பு கருதியும் நுகர்வோருக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையிலும் தற்போது மிக முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது தகவல் நுட்பம் தற்போது வியாபாரம் சார்ந்த தொலை பேசி அழைப்புகளிலிருந்தும் மற்றும் வேண்டாதவர்களின் அழைப்புகளிலிருந்தும் தடுக்கும் அம்சத்தை தர உள்ளது.இதனால் மத்திய தகவல் ஆணையம் டெலி மார்கெடிங் செய்யும் எண்களையும் பற்றிய தகவல்களையும் அடங்கிய புகார்களையும் ஒவ்வொரு வாரமும் வெளியிட உள்ளது. அதில் தொலைபேசி எண்களும் தேவையல்லாத தொந்தரவு தரும் அழைப்புகளும் பற்றியும் வியாபாரங்கள் அடங்கிய ஒரு குறிப்பை வெளியிட உள்ளது.இந்த தரவில் தேவையில்லாத அழைப்பின் I .D மற்றும் அது குரல் அழைப்பா? அல்லது பதிவு செய்யப்பட்ட குரல் அழைப்பா? மற்றும் தேதி போன்ற தகவல் அறிக்கையும் இதில் அடங்கும்.
இந்த தரவுகள் மென்பொருள் டெவலப்பர்களுக்கும் மிகவும் உதவியாக இருக்கும் என நம்புகின்றனர். இதை இன்னும் லேண்ட்லைன் இணைப்பிற்கும் விரிவுபடுத்த உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவலைக் கொண்டு மென்பொருள் டெவலப்பர்கள் அந்த எண்களுக்கு ஒரு தனியான குரல் அழைப்பையோ அல்லது குறுந்தகவலையோ அனுப்ப வசதிகள் செய்ய எதுவாக இருக்கும். இதனால் தேவையில்லாத அழைப்புகளை தடுக்கலாம். மேலும் அடிக்கடி வேலையின் போதும் தொந்தரவு தரும் அழைப்புகளை மறுக்கலாம்.
Comments are closed.