விளம்பரமில்லா யு-டியூபின் மாதக் கட்டண சாந்தா சேவை

392

 700 total views

யு-டியூப் தொடங்கி அதன் பத்தாண்டுகளை அதன் இலவச வீடியோ சேவையை பத்தாண்டுகளாக நிறைவேற்றி இருந்தாலும் அதன் பொருளாதாரத்தை நோக்கும் போது பின் தங்கிய நிலையிலேயே இருந்தால் யு-டியூப் red சேவையை துவக்கி உள்ளது.அதாவது யு-டியூப் ஒரு விளம்பரதாரர் நிறுவனமே ஆனால் நாம் யாரும் யு-டியூபில் விளம்பரங்களை காண விரும்புவதில்லை . அதனால் தற்போது விளம்பரமில்லாமல் வீடியோக்களை காண யு-டியூப் மாதச் சந்தா சேவையை அக்டோபர் -28 லிருந்து மக்களுக்கு அறிமுகப்படுத்த உள்ளனர். இதனால் இனி கட்டணமில்லா வீடியோக்களை ரசிக்க முடியாது என்பதில்லை . விளம்பரத்தோடு இலவசமாகவோ அல்லது விளம்பர இடைவேளையின்றி மாதக்கட்டணம் 9.99 $ செலுத்தியோ பார்க்கலாம். ios பயனர்களுக்கு மட்டும் $12.99 வசூலிக்கப்படும் என அறிவித்துள்ளது.

red1.0
இதனால் விளம்பரங்களை இல்லாமல் நான் பார்க்க வேண்டிய வீடியோவை எந்தவித இடையூறும் இன்றி பார்க்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு தற்போது மாத சந்தாவுடன் வர உள்ளது.இதனால் ஒன்று மக்கள் விளம்பரத்துடன் கூடிய வீடியோவையோ அல்லது மாத கட்டணத்துடன் கூடிய விளம்பர இடைவேளையில்லா சேவையையோ பெறலாம். இதன் மூலம் யூ -டியூப் தொடங்கிய காலத்திலிருந்தே வந்த வருவாயை விட கூடுதல் வருமானத்தை யு-டியூப் பெரும் என்பது நிச்சயம்.

இந்த யூ -டியூப் red ல் தற்போது விளம்பர இடைவேளையின்றி வீடியோக்களை கண்டு மகிழ்வதுடன் மட்டுமல்லாமல் அந்த வீடியோக்களை இன்னையமில்லா நேரத்திலும் கூட காணலாம் என்பது வியப்பில் ஆழத்தும் செய்தியே .இதில் பல இசைப் பயன்பாடுகள் மற்றும் விளையாட்டு பயன்பாடுகளை வெகுவிரைவில் சேர்க்க உள்ளது.
இந்த யூ -டியூப் red எந்த சாதனத்திலும் எங்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் கேட்கலாம்.அமெரிக்காவில் யு-டியூப் தொடங்கிய ஒரு மாத்தத்ஹிர்க்கு மட்டும் இலவசமாகவும் அடுத்தடுத்த மாதத்திற்கு கட்டணத்துடன் அளிக்க உள்ளது.பின்னர் உலகளாவிய அனைத்து உலகளாவிய அனைத்து பயனர்களுக்கும் வழங்கப்படும்.இதனால் எந்தவித தடையோ மனச் சிதறலோ இல்லாமல் நாம் பார்க்க நினைக்கும் காட்சியையோ அல்லது இசையையோ நல்ல வழியில் அமைத்து தரும்.

 

யூ -டியூப் red ல் பின்னியில் நாம் விரும்பும் செயல்களை செய்து கொண்டே பாடல்களைக் கேட்டு ரசிக்கலாம். யு-டியூப் பின் சந்தா சேவையில் இனி வரும் காலத்தில் அனைத்து இசையை வழங்கும் சமூக வலைதளங்களும் இந்த சேவையை கையாள வாய்ப்புகள் உண்டு.அதன் பின் கட்டண சேவையில் யூ -டியூப் ஒரு போட்டியான உலகை சந்திக்க நேரிடும். இந்த புதிய சேவை மூலம் யூ -டியூப் தொடங்கிய காலத்திலிருந்தே வந்த வருவாயை விட கூடுதல் வருமானத்தைப் பெரும் என்பது நிச்சயம்.

 

You might also like

Comments are closed.