பிளேஸ்டேஷன் VR மூலம் நாசாவின் விண்வெளி ரோபோக்களுக்கான பயிற்சி :

0 46

  VR நுட்பத்தினைக்  கொண்டு பொழுதுபோக்குகளில் மட்டுமே செலவளிக்காமல் விஞ்ஞானம்  போன்ற நுட்பத்தில் பயன்படுத்தி  நாசா விண்வெளியில் சாதித்து வருகின்றனர்.இதற்கு முன் ps 4 வீடியோ கேம்களை பயன்படுத்தி அதன் நுட்பத்தின்  வழியாக இராணுவ  வீரர்களுக்கு போர்க்களத்தில் நடந்து கொள்வது பற்றிய விதிமுறைகள் பயிற்றுவிக்கப்பட்டது. தற்போது  VR மூலம்  நாசாவின்  விண்வெளி ரோபோக்களுக்கான பயிற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.இதன் மூலம்  மனித உருக்கொண்ட ரோபோவினை எப்படி இயக்குவது? எவ்வளவு தூரத்தில் இருந்தால் பாதுகாப்பாக இயக்குவது எனபதைப்  பற்றிய ஒரு பயிற்சியை  பயனர் பெற முடியும்.  

 

இதனால் ஒரு தகுதி வாய்ந்த  பயிற்சியினை பயனர் எப்போதும் எத்தனை முறை வேண்டுமானாலும் செய்து பழகி பயிற்சி பெறலாம். இதனால் திடீரென  தடைகளையோ அல்லது இடர்பாடுகள் போன்றவற்றையோ  எப்படி கையாளுவது என்பது போன்றவற்றை  அமர்ந்த இடத்திலிருந்தே கற்றுக் கொள்ளலாம். இதன் மூலம் வின்வெளியிலிருக்கும் மனித உருவம் கொண்ட ரோபோக்களை பூமியிலிருந்தே  இயக்கலாம் . இதற்கு பயனர்கள்  துல்லியமான  ஒரு பயிற்சியினை மேற்கொள்வது அவசியமே! இதனை VR  உடன்  இணைந்து  செயலாற்றினால் பயனர்களுக்கு பயிற்சியானது  எளிதாக அமையும் . VR  நுட்பத்தினை  வருகாலங்களில்  பல துறைகளில் காணும் வாய்ப்புகள்  அதிகமுள்ளன.

Related Posts

You might also like

Leave A Reply