இணையமில்லா கூகுளின் வரைபட பயன்பாட்டை இனி ios போன்களிலும் பெறலாம் :
760 total views
கூகுள் செப்டம்பர் மாதம் பயனர்களின் நலன் கருதி இணையமில்லாமலே கூகுளின் வரைபட பயன்பாட்டை அணுகும்படி செய்திருந்தது. ஆனால் அதில் முதற்கட்டமாக ஆன்ட்ராய்டு பயனர்கள் மட்டுமே அணுகும்படி செய்திருந்ததது. தற்போது ios பயனர்களும் பயனடையச் செய்துள்ளது. இதனால் பயனர்கள் இணையத்தில் அவர்களுக்கு தேவையான இடத்தின் கூகுல் வரைபடத்தை பதிவிறக்கம் செய்து விட்டால் பின் அதனை இணையமில்லா நேரங்களிலும் பார்த்துக் கொள்ளலாம் . மற்றும் அருகே இருக்கும் உணவகங்கள் மற்றும் முக்கிய தளங்களின் நிலவரங்களையும் அறிந்து கொள்ளலாம். கூடவே இதோடு நமக்கு மிக இருக்கும் பெட்ரோல் நிலையத்தையும் மற்றும் பெட்ரோலின் அன்றைய விலையையும் தெரிவிக்கக் கூடியது.இந்த குறிப்பிட்ட அம்சம் மட்டும் தற்போது அமெரிக்கா மற்றும் கனாடாவில் மட்டுமே அறிமுகபடுத்த உள்ளனர். இந்த அனைத்துமே ஒரு சிறிய தொடுதலில் நிகழ்ந்து விடும் . இதனால் இணையமில்லா நேரத்திலும் அல்லது நெட்வொர்க் கவரேஜ்கள் இல்லாத நேரத்திலும் பயனர்கள் அவரவர் மொபைல் சாதனத்தினை பயன்படுத்தி கூகுளின் வரைபட பயன்பாட்டினை அணுகலாம்.
Comments are closed.