“Virtual Reality ” இனி ios பயனர்களுக்கும் ஆதரவளிக்கும்: கூகுள் நிறுவனம்
1,222 total views
கூகுள் நிறுவனம் “Virtual Reality ” என்கிற மெய்நிகர் நுட்பத்தை கண் முன் தரும் ஒரு வகை கண்ணாடியை தயாரித்து வெளியிட்டது அனைவரும் அறிந்ததே. “Virtual Reality ” என்பது என்னவென்றால் சாதரணமாக நாம் ஒரு வீடியோவினை காண்பதற்கும் “Virtual Reality ” (VR) மூலம் ஒரு வீடியோவைக் காண்பதற்கும் பெரும்பாலும் வித்தியாசம் உண்டு. அது என்னவென்றால் கூகுள் தயாரித்துள்ள இந்த ஹெட் செட்டின் வழியே ஒருவர் வீடியோ காட்சியினைக் காணும்போது வீடியோவில் ஒளிபரப்பாகும் அந்த இடத்தில் நாமும் இருப்பதைப் போன்ற ஒருவகை உணர்வினைப் பெற முடியும். சுருங்கக் கூறின் ஒரு மாயக் கண்ணாடியை போன்று செயல்படுகிறது. கூகுள் நிறுவனம் (VR) ஹெட் செட்டினைத் தயாரித்து வெளியிட்டதை தொடர்ந்து பேஸ்புக் மற்றும் இதர சில நிறுவனங்களும் இதுபோன்ற ஹெட்செட்டுகளை தயாரித்துள்ளனர். “Virtual Reality ” தளத்தில் ஏற்பட்ட போட்டியினை மனதில் கொண்டு கூகுள் நிறுவனம் உலகளாவிய முறையில் மக்கள் அதிகமாக வீடியோக்களைக் காணும் யூ-டியூப் தளத்தில் “Virtual Reality (VR) வீடியோக்களை காணுமாறு செய்யப்பட்டது. இதற்காக ஆன்றாய்டு அப்டேட்டை கடந்த நவம்பர் மாதத்தின் போது வெளியிட்டது. தற்போது ios பயனர்களும் பயன்படுத்தும்படியான அப்டேட்டை வெளியிட்டுள்ளது. பில்லியன் கணக்கில் பயனர்களைக் கொண்ட யூ-டியூப் தளத்தில் Virtual Reality க்கான ஆன்றாய்டு மற்றும் ios அப்டேட்டுகள் இரண்டும் கிடைக்கும்படி செய்துள்ளதால் மெய்நிகர் நுட்பத்தில் கூகுள் ஒரு புது மைல் கல்லை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Comments are closed.