எம்எஸ் பெயின்ட் பிரஷ் நீக்கப்படாது- விண்டோஸ் 10-இல் அப்டேட் செய்யப்படும்

554

 1,152 total views

கணினி பயன்பாட்டாளர்களிடையே மிகவும் பிரபலமான ‘மைக்ரோசாப்ட் பெயிண்ட்’ மென்பொருளை தனது இயங்குதளத்திலிருந்து நீக்கப் போவதில்லை என்று மைக்ரோசாப்ட் நிறுவனம் உறுதி அளித்துள்ளது.

90-களில் பிறந்த அல்லது படித்தவர்களுக்கு பெயின்ட் பிரஷை மறக்க முடியாது. கணினி புரோகிராம்களை விட இதை கற்றுக் கொள்வதில் ஆர்வம் அதிகமாக இருக்கும். இந்த சாப்ட்வேரை தெரிந்து வைத்துக் கொண்டு அன்று நம் காலத்து மாணவர்கள் கொடுத்த பில்டப் இருக்கே அப்பப்பா….

எம்எஸ் பெயின்ட் பிரஷ் கற்றுக் கொண்டிருந்தால் கணினியே அத்துப்படி என்ற அளவுக்கு அப்போதைய டிரென்ட் இருந்தது. இதில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை படம் வரைந்தும், வண்ணங்கள் தீட்டியும் மகிழ்ந்ததை யாராலும் மறக்க முடியாது. இந்த பெயின்ட் பிரஷை கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் ரத்து செய்வதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்தது. இதற்கு அனைவரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து தன் முடிவிலிருந்து பின்வாங்கியுள்ளது அந்த நிறுவனம். இதுகுறித்து அந்த நிறுவனம் கூறுகையில் விண்டோஸ் 10-இன் புதிய அப்டேட்டில் பெயின்ட் பிரஷ் சேர்க்கப்படும். இதை நீக்கும் எண்ணம் இல்லை என்று தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தற்போது வரும் விண்டோஸ் 10 ன் புதிய அப்டேட்டில் அதில் புதிய அணுகளுடன் கொண்டஅம்சத்தை இணைத்துள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.

நாம் எம்எஸ் பெயின்ட்டில் பொதுவாக மவுசு அல்லது டச் ஸ்க்ரீன் உள்ளிட்டவை மூலம் பயன்படுத்துவோம் ஆனால் தற்போது கிபோர்டு மூலம் இயக்கும் வசதியை கொண்டுவந்துள்ளது.மேலும் இந்த அப்டேட் விரைவில் வெளியாகும்  விண்டோஸ் 10 ன் புதிய அப்டேட்டில் இடம்பெறும் என்றும் அறிவித்துள்ளது.

You might also like

Comments are closed.