உங்கள் மணிக்கட்டில் அணியும் கணினி பலகைகள் வந்து விட்டது ..!

503

 705 total views

மணிக்கட்டில் அணியும் ஸ்மார்ட் வாச்சுகளை இதற்கு முன் பல நிறுவனங்கள் தயாரித்து வழங்கியதை வாங்கி உபயோகபடுத்தியிருப்பீர்கள் .  உண்மையில் இது ஒரு மாத்திரை அல்ல. மாத்திரை போன்ற வடிவத்தில் உள்ள ஸ்மார்ட் வாச்சுகளே! அந்த அனைத்து ஸ்மார்ட் வாட்சுகளும் மிகவும் சிறிதான அளவே இருந்ததால் ஏதோ ஒரு குறையை பயனர்களிடம் தந்து கொண்டே தான் இருந்தது .அந்த குறையை நீக்கும் வகையில் ரூப்ஸ் காப்ஸ் நிறுவனம் 3.2 அங்குல தொடு திரையுடன் கூடிய இரண்டு போன்கள் சேர்ந்த அளவிற்கு ஒரு பெரிய ஸ்மார்ட் வாட்சை கண்டறிந்துள்ளது .இது ஒரு ஸ்மார்ட் போன் ,கைக் கடிகாரம் , ஸ்மார்ட் வாட்சுகள் , உடற்பயிற்சி டிராக்கர்கள் ,பணப்பைகள் போன்ற அனைத்தையும் ஈடு கட்டும் வகையில் ஒரே சாதனமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

RufusLabs-4-1-5
சிறப்பம்சங்கள் :
வை-பை :
இதில் வை-பை இணைப்புகள் இருப்பதால் வீடுகள் , பள்ளிகள் மற்றும் அலுவலகங்களில் பயன்படுத்திக் கொள்ளலாம்.
புளூ டூத் :
உங்கள் ஹெட் போனுக்கும் , ஒலிப்பெருக்கிக்கும் ஆதரவளிக்கக்கூடியது .
குரல் மற்றும் வீடியோ அழைப்புகள் :
இதிலுள்ள ஒலிப்பெருக்கி, மற்றும் முன் எதிர் கொள்ளும் கேமரா மற்றும் தரமான ஒலிகளுடன் கூடிய இரட்டை மைக்ரோ போன்களைக் கொண்டு ரூபஸ் கப்பில் குரல் மற்றும் வீடியோ அழைப்புகளைப் பேசலாம்.
இசை :
நீங்கள் கேட்க விரும்பும் அனைத்து இசையையும் கொடுக்கும் விரும்பும் வகையில் இசை சமந்தப்பட்ட அனைத்து மென்பொருள் மற்றும் வன்பொருள் அனைத்தையும் வழங்குகிறது.
பயன்பாடுகள் :
இந்த ஸ்மார்ட் வாட்ச் முழுவதுமாக அன்றாய்டு பதிப்பில் இயங்கக்கூடியது .
உடற்பயிற்சி:
கண்டிப்பாக வழக்கம் போல் மற்ற அனைத்து ஸ்மார்ட் வாட்சுகளிலும் காணப்படுவதைப் போலவே உடற்பயிற்சி டிராக்கர்கள் நுட்பமும் இதில் உள்ளன .
குறுந்தகவல்கள் :
இதன் பெரிய திரையால் மற்ற ஸ்மார்ட் வாச்சுகளைப் போலல்லாமல் குறுந்தகவலையும் மின்னஞ்சலையும் நன்றாக விரிவாக தெளிவான நிலையில் பார்ப்பது மட்டுமல்லாமல்அதற்கு விசைப்பலகையின் உதவியுடன் பதிலளிக்கவோ அல்லது குரல் பதிவுகளையோ அனுப்பவோ முடியும் .
வலை தளம் :
உங்கள் மணிக்கட்டின் வழியாக இணையத்தை பற்றிய அலசலையோ அல்லது தேடலையோ காணலாம்.
தண்ணீரில் நனையாதது :
ரூப் கப் வாட்ச்சுகள் மழைநீரில் நனைந்தாலும் ஒன்றும் ஆவதில்லை என்பது இது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது எந்த நிலையிலும் மழையோ வெயிலோ இதனை உபயோகிக்கலாம்.

முக்கிய தொழில் நுட்ப அளவுருக்கள் :
➤TI. கார்டெக்ஸ் A9 செயலி
➤புளூ டூத் 4.0
➤3.2 அங்குல தொடுதிரை
➤GPS
➤திசைகாட்டி
➤ஒலிப்பெருக்கி
➤இரட்டை ஒலிவாங்கிகள்
➤முன் எதிர் கொள்ளும் வீடியோ கேமராக்கள்
➤ அதிர்வு எச்சரிக்கை (வைப்ரேசன் அலார்ட் )
➤16/32/64 GB சேமிப்பு
➤1175mAH மின்கலன் (பேட்டரி )
➤LED பிளாஸ் எச்சரிக்கை
➤அன்ட்ராய்டு கிட் கேட்
➤பல்வேறுபட்ட மொழிகளின் ஆதரவு
➤நீரில் நனையாத பாதுகாப்பு
இது சாதாரண ஸ்மார்ட் வாச்சுகளிலிருந்து பல விசயங்களில் மாறுபட்டாதாக இருப்பதால் ஸ்மார்ட் போனிற்கு இணையாக இதனை உபயோகிக்கலாம் .இதனை உடனே வாங்க வேண்டும் என்று விரும்புகுறீர்களா ? இதன் முன்உத்தரவுகளை $299 க்கு பெறலாம் அல்லது 16,32,64GB போன்ற சேமிப்புகளுக்கு ஏற்றவாறு வெவ்வேறு விலைகளில் வெவ்வேறு நிறங்களில் பெறலாம் .
இது முந்தைய ஸ்மார்ட் வாச்சுகளைப் போலல்லாமல் கூடுதலான அம்சங்கள் பலவற்றைக் கொண்டு காணபடுகிறது. இதனால் ஒரு குறுந்தகவலையோ அல்லது மின்னஞ்சலையோ நம்மால் தெளிவாகக் காண முடியும்.சிறிய திரையிலிருந்து பெரிய திரைக்கு மாறிய ஒரு அனுபவத்தை உணரும் வகையில் உள்ளது. இது கண்டிப்பாக வாடிக்கையாளர்களிடம் ஸ்மார்ட் வாச்சுகள் தளத்தில் ஒரு புரட்சியை உண்டு பண்ணும் விதமாக அமையும் என எதிர்பார்க்கபடுகிறது.

You might also like

Comments are closed.