பெட்ரோலின் விலையைச் சொல்லும் கூகுளின் வரைபட பயன்பாடு ;

447

 704 total views

கூகுளின் வரைபட பயன்பாட்டை பற்றி அனைவரும் கேள்விபட்டிருப்போம் . தற்போது அடுத்த கட்டமாக கூகுள் அதில் முக்கிய சிறப்பம்சத்தை சேர்த்துள்ளது. இதற்கு முன் உள்ள கூகுள் பயன்பாட்டை காட்டிலும் இந்த பயன்பாட்டில் கூடுதலாக சில சிறப்பம்சங்களை சேர்த்துள்ளது.

இந்த சிறப்பான வசதியை அணுக திரையின் மேல் காட்டப்படும் பூதக்கண்ணாடி சின்னத்தை அணுக வேண்டும்.அங்கு உள்ள மெனுவில் பல ஆப்சன்கலுடன் பட்டன்கள் இருக்கும். இந்த பட்டன்களில் பெட்ரோல் வங்கி , உணவகம், தேநீர் கடை , பலசரக்கு கடை போன்ற வாய்ப்புகளும் இறுதியாக கூடுதலாக மற்ற இடங்களையும் தேடும் ஒரு சிறப்பு அம்சத்தையும் பார்க்கலாம்.இதனால் இந்த பட்டன் கூடுதலாக பெட்ரோல் வங்கி , உணவகம், தேநீர் கடை , பலசரக்கு கடை போன்றவற்றை தாண்டியும் மற்ற வணிகம் சம்மந்தப்பட்ட வழிகளையும் காண உதவுகிறது. இந்த அம்சத்தை மைக்ரோ போன் பட்டனை தட்டுவதன் மூலம் குரல் தேடல்களின் மூலமும் வழிகளை அறிந்தும் கண்டறியலாம் .

sar-2-_framed-3

தற்போது ஒரு பெட்ரோல் வங்கியை தேடும்போது அனைத்து பெட்ரோல் வங்கியை மட்டும் காட்டுவது மட்டுமல்லாமல் அந்த சமயத்தில் நீங்கள் இருக்கும் புள்ளியிலிருந்து உங்களுக்கு அருகிலுள்ள பெட்ரோல் வங்கிக்கு வெகு விரைவில் செல்லும் வழியை திட்டமிட்டு காட்டும் . தற்போது இந்த புதிய அம்சத்தில் குறுகிய நேரத்தில் சென்றடையும் வழிகளை மட்டுமே காட்டாமல் கூடவே பெட்ரோலின் விலையை காட்டும் அளவிற்கு கூட மேம்படுத்தப்பட்டுள்ளது .இதனால் திடீரென்று செல்லும் வழியில் எரிவாயு தீர்ந்து விட்டாலோ அல்லது அவசர மாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டியிருந்தாலோ உடனடியாக நமக்கு மிக அருகில் உள்ள மையத்தை அதாவது சீக்கிரமாக செல்லக்கூடிய வழியை எடுத்துக் காட்ட கூடியது.
இந்த பயன்பாட்டில் நீங்கள் திட்டமிட்ட இடத்திலிருந்து குறுகிய மாற்று பாதைகளை தர  சிறப்பாக வடிவமைக்கப்படுள்ளது .கூகுள் இந்த அம்சத்தை முதலில் அண்ட்றாய்டு போன்களில் ஓரிரு வாரங்களிலேயே உலவ விட உள்ளது . மேலும் ஐபோன்கள் மற்றும் மற்ற பதிப்புகளில் வெளியிடுவது                                                          பற்றிய எந்த அறிவிப்பும் இதுவரை வழங்கப்படவில்லை.

You might also like

Comments are closed.