இணையத்தை சாப்பிடும் முகநூல் :
681 total views
முகநூலின் அடுத்தடுத்த திணறடிக்கும் புது புது அம்சங்களால் மக்களை ஒரே இடத்தில் இருக்க (ஈர்க்க) வைக்கிறது. முகநூல் உங்களை விட்டு எப்போதும் நீங்காத அளவிற்கு பல சிறப்பம்சங்களை தன்னுள் கொண்டுள்ளது.முகநூளிலேயே அதிக நேரங்கள் செலவிடுவதால் அது உங்களை எப்போதும் கட்டிப்போட்டு ஓரிடத்தில் வேலை செய்ய வைக்கிறது. இதனால் விளம்பரதார நிருவனங்களிடமிருந்து நிறைய வசூலை பெறுகிறது.முகநூலில் கடந்த பல மாதங்களாகவே பல புதிய சிறப்பம்சங்களை முகநூல் நிறுவனத்தினர் புகுத்தி வருகின்றனர் அவற்றுள் சில அம்சங்கள் உங்கள் பார்வைக்காக…
1.ஒப்படைக்கப்பட்ட வீடியோ காட்சிகள் :
முகநூல் இந்த வீடியோ காட்சிகள் யு -டியுபின் சந்தா சேவைக்கு போட்டி தருவதாக அமையாமல் தனிப்பட்ட முறையில் வீடியோவை காணவும் மற்றும் வீடியோவை மட்டுமே பார்த்து கொண்டிருக்காமல் அதே சமயத்தில் மற்ற புகைப்படங்களையும் காண வழிவகுக்கிறது. இதனால் சளைக்காமல் வீடியோக்களை பார்க்கும் வண்ணம் அமைக்கப்பட்டது.
இதனால் ஒரே நேரத்தில் புகைப்படங்கள் மற்றும் நமக்கு பிடித்த வீடியோக்களை பார்த்து ரசிக்கலாம்.
2.பரிந்துரைத்த வீடியோ காட்சிகள் :
முகநூலில் நீங்கள் ஏதாவது சிறப்பாக காண முயன்றால் முகநூல் உங்களுக்கு அது சம்பந்தப்பட்ட வீடியோக்களை நீங்கள் காண பரிந்துரைக்கும்.நீங்கள் அருகிலே கீழே வீடியோக்களை தேய்த்தால் போதுமானது.
3.புகைப்படத்துடன் கூடிய வீடியோ :
முகநூல் உங்கள் வீடியோக்களை மட்டுமே பார்த்து சலித்து போக வைக்காமல் வீடியோ காட்சிகள் ஓடிக் கொண்டிருக்கும் போதே கூடவே புகைப்படங்கள் மற்ற செய்திகளையும் மறு பக்கத்தில் காண வழி வகுக்கிறது.
4.உடனடி கட்டுரைகள் :
இந்த கட்டுரைகள் திரையில் காட்டப்படும்போது அதை கிளிக் செய்கையில் உடனுக்குடன் கட்டுரைகளை வாசித்து விட்டு வெளி வரும் சிறப்பான அம்சத்தை தந்துள்ளது.
5.முகநூலின் உடனடி விளம்பரங்கள் :
உடனடி கட்டுரைகளில் செய்த அதே தொழில் நுட்பத்தை தான் தற்போது உடனடி விளம்பரங்களில் செய்து வருகிறது. இதனால் பயனர்கள் முகநூளுக்கு அதிக டாலர்களை ஈட்டி தருகின்றனர்.
6.சாப்பிங் பகுதி :
சாப்பிங் பகுதியில் கூடுதல் செரிவூடலாக நீங்கள் தேடும் தயாரிப்புகள் சமந்தமாக அனைத்து தயாரிப்புகளையும் ஒரே இடத்தில் வாங்கவும் ஒரு தயாரிப்பு சமந்தப்பட்ட அனைத்ஹ்டு வித தகவல்களையும் ஒரே இடத்தில் பெறவும் வழி செய்கிறது.
7.சாப்பிங்கின் தேடு பொறி ;
முகநூல் வெவ்வேறு தயாரிப்புகளை பற்றிய தேடும் அமைப்பில் அமேசான் மற்றும் கூகுளுடன் போட்டி போடும் வண்ணம் திறம் வாய்ந்த தேடு பொறிகளை உருவாக்கியுள்ளது.
8.சாப்பிங் தேடல் பக்கங்கள்:
ஒட்டுமொத்த சாப்பிங் பகுதிகளின் மூலம் முகநூல் அதன் பக்கங்களை சாப்பிங் செய்யும் அங்காடித் தெருவாக மாற்றுகிறது.இதனால் வெறும் லின்க்குகளை மட்டுமே பெறாமல் பணத்தை சம்பாதிக்கும் ஒரு வியாபார நுட்பம் கொண்டதாகவும் உருவெடுத்துள்ளது.
9.முகநூலின் லின்க்குகள் :
நீங்கள் ஒரு லின்ன்கை சேர் செய்யும்போது முகநூல் உங்களுக்கு வலப்பக்கத்தில் url ஐ சேர்க்க வலி செய்கிறது. இதனால் இணையத்தின் மற்ற பக்கத்தில் சென்று url ஐ தேடுவது குறையும்.10.செய்தித்தாள் : :
பிரபலமான தலைப்பு பிரிவுகளின் மூலம் ஒரு செய்தி தாளில் வருவது போல முக்கியமான தலைப்போக்ல் என தனித்தனியாக பிரித்து காட்டப்படுகின்றன. இதன் மூலம் செய்திகள் வெவ்வேறு தலைப்புகளில் காட்டபட்டு விதவிதமான செய்திகளை தரம் பிரித்ஹ்டு காட்டபடுகின்றன.
11.முகநூலின் நினைவூட்டல்:
“on this day” மூலம் ஒரு வருடத்திற்கு முன்னர் நீங்கள் வெளியிட்ட புகைப்படங்கள், வீடியோக்கள் போன்ற நினைவுகளை நினைவு கூறலாம். அதாவது ஒரு வருடத்திற்கு முன்னர் நீங்கள் உங்கள் நண்பருடன் பகிர்ந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் போன்றவற்றையும் ஞாபகமூட்டல் மூலம் காணலாம். உங்கள் நினைவுகள் புதுபிக்கதக்கதாகவும் நினைவு கூறும் விதமாகவும் இருக்கும். உதாரணமாக பலநாள் கழித்து ஒரு டைரியை புரட்டி பார்ப்பது போன்ற சந்தோசத்தைத் தரும்.
12.முகநூலின் வாங்கும் (buy ) பட்டன்கள் :
இந்த buy பட்டன்களில் முகநூலை விட்டு வெளியேறாமலே பொருள்களை வாங்கும் அம்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது முகநூல் பக்கத்திலேயே தயாரிப்புகளை காணவும் வாங்கவும் கூடவே நண்பர்களுடன் பகிரவும் முடியும்.
13.முகநூலின் ஸ்நாப் சாட் :
இதில் புகைப்படங்களை எடிட் செய்தோ ,கிரோப் செய்தோ அதன் மீது வரைந்து மகிழும் சிறப்பு பயன்பாட்டை கொண்டுவந்துள்ளது.பயனர்கள் பிடித்தமான போட்டோவை பதிவேற்றம் செய்து வரையலாம்.
- முகநூலின் குறிப்பெடுக்கும் கருவிகள்:
குறிப்பெடுக்கும் கருவியின் மூலம் புகைப்படங்களின் கீழே கவிதைகளோ அல்லது முக்கிய குறிப்புகளையோ சேர்த்து கொள்ளலாம். உதாரணமாக ஒரு சமையலின் செய்முறையை புகைப்படத்தின் கீழே அந்த உணவிற்கு தேவையான பொருள்களை ஒன்றன் பின் ஒன்றாக புல்லட்டுகளை உபயோகப்படுத்தி பட்டியலிட்டு எழுதலாம்.மேலும் கவிதைகளோ அல்லது கட்டுரைகளோ வெளியிடலாம்.
15.லைவ் பக்கங்கள்:
முகநூலில் பிரபலங்களுக்கான லைவ் பக்கங்கள் வசதியில் சரிபார்க்கப்பட்ட ஆவணங்களுடன் மிக முக்கிய பிரமுகர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும் .இதனால் இந்த பக்கத்தை முக்கிய பிரமுகர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் அணுகும்படி செய்துள்ளனர். தேவையில்லாத நபர்கள் உள்ளே வர அனுமதி கிடையாது.
16.முகநூல் ஒரு உதவியாளன் :
M -Assistant முகநூலில் ஒரு நண்பனாக இருந்து உங்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தரும் ஒரு உதவியாளனாக செயல்படும்,.
உதாரணமாக உங்களின் பயணத்தை ஏற்பாடு செய்வதும், உங்களுக்காக கிப்டுகளை வாங்குவதும் மேலும் நீங்கள் கேட்க்கும் அனைத்தையும் கொடுக்கக் கூடியது.
17.முகநூலில் 360 டிகிரி கோண அளவில் பதிவாகும் வீடியோ:
இது ஒரு வீடியோ பதிவின் ஒரு காட்சியின் வெவ்வேறு கோணங்களை காட்டுகிறது. இந்த வீடியோக்களை உருவாக்க ஒரு தனித்துவமிக்க கேமராக்கள் பொருத்தப்படுகின்றன. இந்த வீடியோவை நாம் முகநூலில் காணும்போது எந்த கோணத்திலிருந்து பார்க்க ஆசைப்படுகிறோமோ அந்த கோணத்தில் காட்சிகள் காட்டப்படுகின்றன. கணிணியில் இணையதளத்தை பயன்படுத்துபவர்கள் கர்சரின் உதவியோடு வீடியோவை வெவ்வேறு கோணத்தில் நகர்த்தி காணலாம். மொபைல் போன் போன்ற சாதனங்களில் பயன்படுத்துபவர்கள் விரல்களின் உதவியோடு ட்ராக் செய்தால் அல்லது மொபைலை சிறிது அசைத்து திருப்பினாலோ காட்சிகளை 360° யில் காணலாம்.
இதனால் முகநூல் கண்டிப்பாக ஒருநாள் முழு இணையத்தையே சாப்பிடும் நேரமும் கூட வரலாம். ஏனென்றால் ஏறக்குறைய இணையத்தில் இருக்கும் அனைத்து அம்சங்களும் முகநூலில் சேர்த்துள்ளனர். இதனால் இனி மக்கள் நேரடியாக முகநூலை மட்டுமே அணுகுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.இது இணையத்தில் மக்கள் வெவ்வேறு வகையான இடங்களை நாடுவதை ஒழித்து ஒரே இடத்தில் எளிதாக கிடைக்கும்படி செய்கின்றனர். உதாரணமாக ஒரு கடையில் பருப்பும் மற்றறொரு கடையில் சீனியும் மற்றொரு கடையில் அரிசியும் வாங்க விரும்புவதை விட இவையனைத்தையும் ஒரே இடத்தில் வாங்கவே நாம் விரும்புவோம் . அதுபோலவே அனைத்து அம்சங்களும் நிறைந்த முகநூல் சந்தையிலேயே மக்கள் குவிய விரும்புவர் . இதனால் கூடிய விரைவிலேயே மக்களுக்கு தேவையான மேலும் சில அம்சங்களை அனைத்தும் ஒரே இடத்தில் தரக்கூடிய வலைதளமாக முகநூல் மாறிவிடும்.
Comments are closed.