முகநூலில் 360° கோண அளவில் பதிவாகும் வீடியோக்கள்:

541

 687 total views

                முகநூல் ஆக்குலஸ் உடன் இணைந்து இந்த 360° கோண அளவுகளில் பதிவாகும் வீடியோக்களை தயாரிக்க  உள்ளது.முகநூலில்  நாளுக்கு நாள் பயனர்கள்  அதிகமாகக்  காரணம் அதிலிருக்கும் சிறப்பம்சம்தான். இதற்க்கு மேலும்  மேருகேற்ற வர உள்ளது 360° கோண அளவுகளில் பதிவாகும் முகநூல்  வீடியோக்கள் . இதன் மூலம்  முகநூல் ஒரு அடி முன்னெடுத்து வைக்கிறது என்று கூறலாம்.

facebook-360-video

எப்படி பார்ப்பது?

          இது ஒரு  வீடியோ பதிவின் ஒரு காட்சியின்  வெவ்வேறு கோணங்களை   காட்டுகிறது. இந்த வீடியோக்களை உருவாக்க ஒரு தனித்துவமிக்க கேமராக்கள் பொருத்தப்படுகின்றன.   இந்த வீடியோவை நாம் முகநூலில் காணும்போது  எந்த கோணத்திலிருந்து  பார்க்க ஆசைப்படுகிறோமோ அந்த கோணத்தில் காட்சிகள் காட்டப்படுகின்றன. கணிணியில் இணையதளத்தை பயன்படுத்துபவர்கள்   கர்சரின் உதவியோடு வீடியோவை  வெவ்வேறு கோணத்தில் நகர்த்தி காணலாம். மொபைல் போன் போன்ற சாதனங்களில் பயன்படுத்துபவர்கள் விரல்களின் உதவியோடு  ட்ராக் செய்தால் அல்லது மொபைலை  சிறிது அசைத்து திருப்பினாலோ   காட்சிகளை 360° யில் காணலாம். எண்ணற்ற வெளியீட்டாளர்கள் இந்த முகநூல் 360° வீடியோ  செய்திகளை பகிர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

             முகநூலை அன்றாய்டு   போன்களில்  உபயோகப்படுத்தினால் நீங்கள் விரைவில் 360° கோண அளவில் பதிவாகும் வீடியோக்களை  காண தயாரகுங்கள். எதிர்காலத்தில் உங்கள் நண்பன் விடுமுறையை கழிக்க  அயல் நாட்டிற்கு சென்றால் அவன் எடுக்கும் 360° வீடியோக்களை  வைத்து நாமும்  அயல்நாட்டினை சுற்றி பார்த்த உணர்வை அனுபவிக்க முடியும். மேலும்  குடும்பங்கள் மற்றும் நண்பர்களிடமிருந்து  வரும் வீடியோக்களையும்  கண்டு மகிழலாம்.

          இந்த  360°கோண அளவில் காட்சிகளை பதியக்கூடிய கேமரா  மிகவும் விலை  உயர்ந்த  தனித்துவமிக்கதாகும்.

அதனால் இத்தகைய  வீடியோக்களை பெரிய நிறுவனங்கள்  வெளியீட்டாளர்கள்  மட்டுமே எடுக்கக் கூடியதாகும். அதனால் உலகில் உள்ள  வீடியோ  கற்பனையாளர்கள்  கதை அமைப்பவர்கள் போன்றோர்  வெளியிடும் வீடியோக்களை  காண தயாராக இருப்போம்.

             தற்போது  முகநூலை இணையதளம் அல்லது அன்ராய்ட்  போன்களில் உபயோகிப்பவர்கள்  இந்த 360°ல்  வெவ்வேறு கோணத்தில்  பதிவாகும் வீடியோ  காட்சிகளை ஒரு சில மாதங்களில் காண தயாராகுங்கள்.முகநூலின் ஆரம்பகால கட்டத்திலிருந்து  நோக்கும்போது  இப்பொழுது   வெளியிட உள்ள  360° வீடியோவை நினைத்து பெருமைப்படலாம். இது மக்களை உலகின் வேறு விதமான பார்வைக்கு கொண்டு செல்லும் என நம்பலாம் .

           இந்த வீடியோக்களை பணக்காரர்கள் மற்றும் பெரிய நிறுவனங்கள் மட்டுமே எடுக்க முடியும் என்ற குறை இருந்தாலும் எதிர்காலத்தில் 360 வீடியோ  தொழில்நுட்பம்  மற்றும் கேமராவின் விலைகள்   குறையும்போது அனைவரும் பயன்படுத்தும் ஒரு ஜனநாயகத்தை பார்க்க முடியும். முகநூல் ஆக்குலஸ் உடன் இணைந்து  V.R (நாமும் அந்த இடத்தில் இருப்பதாக தோன்றும் ) தொழில்நுட்பத்தை பற்றிய பேச்சு  வார்த்தையை நடத்தி வருகிறது. விரைவில் அனைவரும் வீட்டில் உட்கார்ந்தபடியே  உலகை சுற்றி  பார்க்க தயாராகுவோம்.

 

 

 

 

 

You might also like

Comments are closed.