இணையமில்லா நேரத்திலும் முகநூலை அணுகலாம் :

26

இணையமில்லா சேவைகளை  கூகுளின் வரைபட பயன்பாட்டில் தொடங்கியது முதல், அந்த வரிசையில் அடுத்தகட்டமாக முகநூல் அடுத்தபடியாக இணையமில்லாமல் முகநூலை அணுகும் சிறப்பை பயனர்களுக்கு தந்துள்ளது. ஆகையால் இணைய இணைப்பு மெதுவாக இருக்கும்போதிலோ அல்லாது நெட்வொர்க்குகள் கிடைக்காத  தருணத்திலோ முகநூலில் செய்திகளை  எழுதலாம் . மற்றும் செய்திகளுக்கு கருத்துகளையும் தெரிவிக்கலாம். அவையனைத்துமே சரியான இணையதள இணைப்பை  பெற்றவுடன்  முகநூளில்  வெளியிடப்படும்.  இதனால் 2G  இணைப்பையோ அல்லது குறைவான டேடாக்களை  மட்டுமே கொண்ட பயனர்களுக்கும் , இணையத்தை அணுக முடியாமல் இருக்கும் பயனர்களுக்கும் பெரிதாக கைகொடுக்கும். முகநூளின் இத்தகைய முயற்சியால்   நாம் அவ்வப்போது வெளியிட நினைக்கும் கருத்துக்கள் அனைத்தையும் உடனுக்குடன்  ஒரு டைரியில் குறித்து வைப்பது  போன்று  குறித்து வைத்து பின் இணையமுள்ள நேரங்களில் வெளியிடலாம்.

facebook-android

உதாரணமாக ஒருவரின்    பிறந்த நாளன்று வாழ்த்து சொல்ல விரும்புகையில் அவர்களிடம்  இணையமில்லாத   போது    நம் கருத்துகளையும் வாழ்த்துகளையும் எழுதி  வைத்தால் அவற்றினை  இணையத்தினை  அணுகும்போது   செய்திகள் வெளியிடப்படும். இதனால் குறிப்பிட்ட    அந்த நேரத்தில் இணையமில்லாததால் செய்திகளை அனுப்ப முடியவில்லை என்பதனை புரிந்து கொள்ள முடியும். பயனங்களின் போதான நேரங்களில்   பெரும்பாலாக இணையத்தை அணுக முடியாது. அந்த மாதிரி சமயங்களில்  கண்டிப்பாக நேரத்தை பயனுள்ளதாக செலவிட உதவும். இதனால் முன்பை விட பயனர்கள் அதிக நேரத்தினை முகநூளில் செலவிட வாய்ப்புள்ளது.

You might also like

Comments are closed.