வீட்டிலேயே டீ மாஸ்டர் :

705

 869 total views

டெபீரியா நிறுவனம் உங்கள் தேநீர் பருகும் நேரத்தை  அறிவியல் தொழில் நுட்பத்துடன் இணைக்க உள்ளது. தேநீர் தயாரிப்பது என்பது மென்மையான செயல்முறையே ! தற்போது டெபீரியா நிறுவனத்தின் தேநீர் தயாரிக்கும் டி மாஸ்டரைப் பற்றி பார்க்கலாம் . டெபீரியா நிறுவனத்தினர் தேநீர் தயாரிக்கும் இயந்திரம் ஒன்றை அறிமுகபடுத்தியுள்ளனர்.இந்த மாதிரியான சுவையான தேநீரை தயாரிக்கும் சாதனம் கடைகளில் பெரிய உணவகங்களில் மட்டுமே பார்த்திருப்போம் . தற்போது டெபீரியா தேநீர் தயாரிப்பானைக் கொண்டு ஒவ்வொருவரின் வீட்டிலும் ஒரு சொந்த டீ மாஸ்டர் இருப்பதனைப் போல உணரலாம் .
வீட்டிலேயே டீ மாஸ்டர் :
ஒவ்வொரு முறையும் தேநீர் தயாரிக்கும் போதும் சில நேரம் மிகவும் அற்புதமான சுவையுடனும் பல நேரங்களில் சுவை மாறியும் கிடைக்கலாம் . அப்படிப்பட்ட நேரத்தில்தான் அந்த சுவையான தேநீரை எவ்வளவுதான் பெற முயற்சி செய்தாலும் கிட்டுவதில்லை . ஆனால் டெபீரியா தேநீர் தயாரிப்பானுக்கு எவ்வளவு உபகரனங்கள் இருந்தால் சுவையான தேநீரை தரலாம் என்பது தெரிந்திருக்கிறது.இதனால் ஒவ்வொறு முறையும் அசத்தலான சுவைமாறாத ஒரே மாதிரி சுவை கொண்ட தேநீரைப் பெறலாம்.
519197949_c_764_400
இதற்கு முன் இருந்த கியூரிக் தேநீர் தயாரிப்பான் அதன் தேநீர் காய்ச்சும் செயல்முறையில் சரியாக செயல்படாத குறையைக் கருத்தில் கொண்டு டெபீரியா தற்போது ஒரு சிறந்த சுவையான தேநீருக்கு தேவையான அனைத்து அளவுருக்களையும் தெரிந்து வைத்திருக்கிறது. எவ்வளவு கொதிநிலையில் காய்ச்ச வேண்டும்? எவ்வளவு பொருள்கள் சேர்க்க வேண்டும் என்ற விகிதம் அனைத்தும்                                                                                                                    அறிந்த ஒரு அனுபவம் வாய்ந்த டீ மாஸ்டரைப் போல                                                                                                செயல்படுகிறது.

➤இந்த தேநீர் தயாரிப்பானை உலகிற்கு கொடுப்பதன் மூலம் இதுவரை நீங்கள் தவறவிட்ட சுவையான தேநீரையும் பாரம்பரியத்தின் உண்மையான தேநீரின் அடையாளத்தையும் கொண்டுவருவதாக மிகப்பெரிய தேநீர் பிரியரான டெபீரியாவின் இணை நிறுவனர் திரு.ஹான் கூறினார்.

➤இதனால் பாத்திரங்களில் இருக்கும் பழைய தேநீரை மறுபடியும் கொதிக்கவைத்து குடிக்காமல் எப்போதெல்லாம் தேவையோ அப்போதே உடனடியாக விரைவான கொதிநிலையுடன் சூடான சுவையான தேநீரை ஒவ்வொறு முறையும் பருகுங்கள். இந்த டெபிரியா சுத்தமான தூய்மையான தரத்துடன் உள்ள தேயிலைகளை மட்டுமே உட்செலுத்த அனுமதிக்கிறது. மற்ற இலைகளை அனுமதிப்பதில்லை . பின் தேவையான அளவு தண்ணீரை சேர்த்து பட்டனை அழுத்தும்போது இந்த செயல்முறை ios அல்லது அன்ட்ராய்டு போனில் சாதனத்தின் நிலை காட்டப்படுகிறது.
lxr0luin_jqr5xurupybgfpmd0zcrd-emza7iieklvc       இந்த அனைத்துமே 4 நிமிடங்களுக்குள் நடந்து முடிகிறது ஆச்சரியமே . இதன் மூலம் இதுவரை நீங்கள் அருந்தியிராத ஒரு தேநீரை பருகிய அனுபவம் நிச்சயம் கிடைக்கும் என கூறியுள்ளனர் . நீங்கள் மட்டுமல்லாமல் விருந்தினருக்கும் கொடுத்து அசத்தலாம்.

இதற்கு எந்த விகிதத்தில் எந்த வெப்பநிலையில் எவ்வளவு நீர் சேர்க்க வேண்டும் என்ற நுட்பத்தை ஒவ்வொறு கப்பிலும் வழங்குகின்றது. தற்போது இதன் முன் உத்தரவுகளை $649க்கு வழங்கி வருகிறது .கியூரிக் போன்ற விலை குறைவான தேநீர் தயாரிப்பான்கள் சந்தையில் இருப்பினும் ஒரு சிறந்த சுவையான பாரம்பரியம் மாறாத தேநீரை பருக டெபீரியாவைத் தான் நாட வேண்டும்.இதனால் தீடிரென உடல்நிலை சரியில்லாத நேரத்தில் கூட அருகில் யாரும் இல்லாவிடிலும் இந்த டீ மாஸ்டர் நமக்கு உதவுவார்.

You might also like

Comments are closed.