நீருக்கடியில் ஆளில்லா விமானம் :
696 total views
டிரைடன் நிருவனத்தினர் தொலைநோக்கி மற்றும் கேமராவுடன் கூடிய நீருக்கடியில் செல்லும் ஒரு இயந்திரத்தை கண்டறிந்துள்ளனர். இதை நீருக்கடியில் செலுத்தி நாமும் நீருக்கடியில் இருப்பது போல் ஒரு உணர்வை பெறலாம் . நீருக்குள் சென்ற பின் அதன் நடவடிக்கையை கணினியில் காணும்படி செய்யப்பட்டுள்ளது . இதனால் நீருக்கடியில் ஆய்வு செய்யவும் மேலும் நீர் வாழ் உயிரனங்களின் வாழ்க்கையை அராய்வதற்கும் இது ஒரு சிறந்த வழியாக இருக்கும் .
இந்த நீருக்கடியில் நடக்கும் நடவடிக்கைகளை வெளிச்சம் போட்டுக்காட்டும் கருவியை Open ROV trident நிறுவனத்தினர் அறிமுகபடுத்தியுள்ளனர். நீருக்கடியில் இந்த கருவி செல்லும்போது நீருக்குள் நடப்பதை கணினியில் தெரிவிப்பது நாமும் நீருக்கடியில் அதே ஆழத்திலிருந்து பயணிப்பது போன்ற ஒரு அனுபவத்தைக் கொடுக்கும் விதமாக உள்ளது.
இதனால் எதிர்காலத்தில் ஆசிரியர்கள் நீருக்கடியில் இருக்கும் விலங்கினங்களைப் பற்றிய அறிவை குழந்தைகளுக்கு புகுட்டும்போது இந்த மாதிரியான இயந்திரத்தின் உதவிகொண்டு விளக்கும்போது அவர்கள் மேலும் ஒரு தெளிவான உண்மை அனுபவத்தைப் பெற முடியும்.நீருக்கடியில் நடப்பதை கண்ணாடி போல் பிரதிபலிக்கிறது. ஒரு பொக்கிசத்தை கண்டறியவும் கூட பயன்படுத்தலாம். அல்லது விளையாட்டு துறையிலும் பயன்படுத்தப்படலாம் .
குறைந்த விலையில் கடலுக்கடியில் ஒரு புரட்சியைப் பல்வேறு வகைகளில் மேற்கொள்ள முடியும் என்று நம்புகின்றனர்.இதனை கிக்ஸ்டாட்டரில் விற்பனைக்கு காணலாம் .இதன் இணைநிறுவனர்கள் ஒன்றிணைந்து முயன்று அதன் அசல் விலையான $50000 விட அதிகமாக்க முயற்சிகளை மேற்கொண்டு $800000 ஐ விற்பனை விலையாக அறிவித்துள்ளனர் .
Comments are closed.