மிதி வண்டி ஓட்டி மின்சாரத்தைப் பெறுங்கள் :

1,139

 1,349 total views

மனோஜ் பார்காவா  என்பவர் ஒரு அமெரிக்க வணிகவியலாளர். ஆனால் இவரின் பிறந்த மண்ணான இந்தியாவிற்கு இன்றும்  பல அரிய  கண்டுபிடிப்புகளை வழங்கி கொண்டுதான் இருக்கிறார். தற்போது மிதிவண்டியின் மூலம் மின்சாரம் பெறும்  யுக்தியை நம் நாட்டினருக்கு வழங்கியுள்ளார் .இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் மிகவும் அத்தியாவசிய தேவையாக தற்சமயம் இருப்பவைகளில் மின்சாரமும் முக்கிய பங்கு வகிக்கின்றது எனலாம். இன்றைய தேதியில் மின்சாரம் இல்லாமல் எதையும் செய்ய முடியாது என்றிருக்கும் நிலையில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் மின்சார பற்றாக்குறை இருக்கத்தான் செய்கின்றது.

குறிப்பாக தமிழகத்தில் இப்பிரச்சனை அதிகம் என்றே  கூறலாம். நம் நாட்டில் மின்சார பிரச்சனையை எதிர்கொள்ளும் விதமாக வீட்டிலேயே மின்சாரம் தயாரிக்கும் எளிய கருவியை   மனோஜ் பார்கவா அறிமுகம் செய்திருக்கின்றார்.

https://youtu.be/6VopSyEhTds

இந்தியாவில் இந்த மிதிவண்டியின் விலை ரூ.12,000 – ரூ.15,000 வரை இருக்கலாம் என்றும் இந்த மிதிவண்டி அடுத்த ஆண்டு மார்ச் மாதம் விற்பனைக்கு வரலாம் என்றும் பார்கவா தெரிவித்துள்ளார். இந்த மிதிவண்டியின் மூலம் நாள் ஒன்றுக்கு 60 நிமிடங்கள் மிதித்தால் 24 மணி நேரத்திற்கு தேவைப்படும் மின்சாரத்தை தயாரிக்க முடியும். இந்த மின்சாரத்தை கொண்டு ஒரு வீட்டில் மின்விளக்குகள், மின் விசிறி, மொபைல் போன் சார்ஜ் போன்றவற்றிக்குத் தேவையான  மின் சக்தியைப் பெறலாம்.

முதற்கட்டமாக  இந்தியாவில்  உத்தராகண்டம் மாநிலத்தில் முதலில் விற்பனைக்கு வரும் இந்த மிதிவண்டி அதன் பின் மற்ற மாநிலங்களிலும் பரவலாக விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால் மின்சார தட்டுபாடு ஏற்படும் சூழ்நிலை மற்றும்  வெள்ளங்களின் போதும் இந்த சாதனம் மக்களுக்கு கை கொடுக்கும்.மேலும் சுற்றுசூழலுக்கு தீங்கில்லாமல் மிதிவண்டிகளின் மூலம் செயல்படுத்தியது  ஆச்சரியதிற்குறியதே !

You might also like

Comments are closed.