அடிக்கடி வரும் புயல் மழைக்கு நம்மாழ்வார் சொல்லும் காரணமும் அதன் பின் உள்ள அறிவியலும்

1,408

 847 total views

பூமி முழுவதும் தொடர் சங்கலியாக காற்று வெவ்வேறு உயரத்தில், அழுத்தத்தில் பயணித்து வருகிறது. ஒவ்வொரு நிலப்பரப்பை, கடலை கடக்கும் போது அதன் தன்மை மாறுகிறது. இத்துடன் காற்று, நிலம், கடல் ஆகியவற்றின் வெப்ப நிலையும் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த தொடர் கண்ணியில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையின் மீதுள்ள 200 அடி, 300 அடி உயரமான மரங்களை தொடர்ந்து வெட்டி 4 அடி உயரமுள்ள தேயிலை பயிர் செய்ததன் விளைவு பருவமழையை பாதிக்கிறது என இயற்கை வேளாண் விஞ்ஞானிகள் சொல்லி வருகிறார்கள்.


நவீன அறிவியலின் பார்வையில் இது Pseudo science (கானல் நீர் போன்ற போலி அறிவியல்) என முத்திரை குத்தி இயற்கை அறிவியல் கருத்துக்களை புறக்கணிப்பர்.  அனால்   TechTamil.com  இந்த இயற்கை அறிவியல்  கருத்தியலை நவீன இயற்பியலின் ஒரு பிரிவான AeroDynamics உடன் ஒப்பிட்டு விளக்கியுள்ளோம். 


புயல் உருவாவதும் ஒரு தொடர் பருவநிலை நிகழ்வே, ஆனால் பருவ மழை அளவு குறைந்து புயல் மழையின் விகிதம் அதிகமாவதற்கு உள்ள பல காரணங்களில், ஒரு காரணமாக இதுவும் இருக்கிறது என்பதை  ஐயா நம்மாழ்வாரின் மேற்கோளுடன் சுட்டி காட்டுகிறோம்.   இந்த காணொளி ஒரு தொடக்கம் மட்டுமே,  பருவநிலை, காற்று, மழை பற்றி ஆய்வு செய்யும் எவரும் தங்களின் கருத்துக்களுடன் இந்த ஆய்வை மேம்படுத்த வரவேற்கிறோம்.  1750ல் ஆரம்பித்து 1830களில் தீவிரமாக தேயிலை பயிரிட்ட காலத்திற்கும் 1855களில் தமிழ்நாட்டில் ஏற்பட்ட மாபெரும் பஞ்சத்திற்கும் உள்ள தொடர்பையும் ஆய்வு செய்ய வேண்டும். 

ஒரு மலை அதில் தாக்குப்பிடித்து வளரும் மர வகைகள், உயிரினங்கள் ஆகியவை லட்ச வருடங்களாக பரிணாம வளர்ச்சி மற்றும் சூழியல் சங்கலியின் ஒரு கண்ணி, அதை எந்த தொலைநோக்கு பார்வையும் இல்லாமல் தற்காலிக நலன்களுக்காக சேதப்படுத்துவது நல்லதல்ல எனும் உணர்வும் புரிதலும் வரவேண்டும் என்பதே TechTamilன் நோக்கம்.  பார்வையாளர்கள், அறிவியலாளர்களிடம் இருந்து கருத்துக்களை எதிர்பார்க்கிறோம். நன்றி – TechTamil.com  கார்த்திக்.

You might also like

Comments are closed.