ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்யவுள்ள யாஹு!!!
1,017 total views
கலிபோர்னியாவை தலைமையிடமாக கொண்ட அமெரிக்காவின் மிகச் சிறந்த பன்னாட்டு நிறுவனமான யாஹு-விற்கு இந்த வாரம் மிகவும் மோசமான வாரம் என்றே கூற வேண்டும். முதலில் அதன் வீடியோ ஹப் மற்றும் யஅஹூ திரையை மூடி வைத்திருந்ததை அடுத்ததாக சிக்கலுக்குள்ளான யாஹு, தனது தொழிலாளர்களில் 10 சதவீத அதாவது கிட்டத்தட்ட 1000பேரை பணிநீக்கம் செய்ய தயாராகி வருகிறது.இதனையொட்டி ஊடக பணியாளர்கள பீதியில் உள்ளனர்.
கடந்த வருடத்தில் யாஹூவிற்கு ஏற்பட்ட ஸ்டாக் மார்கெட்டின் சரிவு :

வர்த்தகத்தை பொருத்தவரையில் யாஹூ நிறுவனம் மிகக் குறைவான வளர்ச்சியை மட்டுமே அடைந்து வந்தமையால் , பல கோடி ரூபாய் இழப்பையும் பெற்று வருகிறது. இதனைச் சரிசெய்ய யாஹூ பல வழிகளை கையாண்டும் தோல்வியை மட்டுமே தழுவிய நிலையில், யாகூ நிறுவனத்திற்கு ஏற்பட்ட இந்த இக்கட்டான நிதி நெருக்கடியை சமாளிக்க 10 சதவீத தொழிலாளர்களை பணி நீக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளது. மேலும் அதன் வருவாய் மற்றும் சந்தை பங்கு தேக்கங்களை சரிசெய்யும் பொருட்டு மற்ற நிறுவனத்தில் இருக்கும் யாஹூவின் பங்கு இருப்பையும் குறைக்க திட்டமிட்டு வருகின்றனர். யாஹூவைப் பொறுத்த வரை கடந்த வருடம் மிகவும் மோசமான வருடமாக அமைந்துள்ளது. பணியாளர்களை குறைப்பது போன்ற நடவடிக்கைகளால் யாஹூ அதன் முந்தைய வளர்ச்சியை 2016-இல் எட்டி பிடிக்குமா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Comments are closed.