2016-இல் வேலையில்லா திண்டாட்டத்தை குறைக்க உதவும் அந்த பத்து செயலிகள் …!

56

உலகாளவிய முறையில் வேலையில்லா திண்டாட்டம் என்பது எபோதும்   நிகழ்ந்து  கொண்டிருக்கும்  ஒரு தொடர் பிரச்சனையாகவே  உள்ளது.  பல ஆண்டுகளுக்கு முன்   வேலை தேடுவோர் அனைவரும்  ஒவ்வொரு அலுவலகமாக தேடி  அலைய  வேண்டியிருந்தது. ஆனால் தற்போது     2016-ஆம் ஆண்டின் புதிது புதிதான ஸ்மார்ட் போன்களின் ஆதிக்கத்தை வேலையில்லா  திண்டாட்டத்தை குறைக்க ஒரு வழிமுறையாக அணுகி  கொள்ளலாம். இதன் மூலம் அமர்ந்த இடத்திலேயே ஒருவர் நாட்டிலுள்ள காலிப் பணியிடங்களைக் அறிந்து கொள்ளலாம். வேலை தேடுவோரின்  எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யும்படியான    வேலைகளைப்   பெற  பல ஆன்றாய்டு செயலிகள் கை கொடுக்கவுள்ளன .தகுதிக்கேற்ற  வேலையை தேடி கொண்டிருப்பவரா நீங்கள்? அப்படியானால் உங்கள் விருப்பம் கைக்கூட இந்த பத்து செயலிகள் உங்களுக்கு கண்டிப்பாக கை கொடுக்கும்.

1.Naukri.com
 வேலை தேடும்  செயலிகளிலேயே  முதலாவதாக Naukri.com  இடம் பெற்றிருப்பதையே  அதன் சிறப்பைக் காட்டுவதாகவே உள்ளது. இதன் மூலம் பயனர்கள்   ஒரு சில நிமிடங்களிலிலேயே அவர்களின்  தகுதிக்கேற்ற வேலைகளைப் பெறவியலும். வேலை தேடுவோரின் தேடல் செயல்முறைகளை எளிதாக்கி சிறந்ததொரு முடிவுகளை பயனர்முன்  தரவல்லது.
4MZT3yQ5
 
2.Indeed Job Search
 உண்மையில் வேலை தேடும் பயனர்களுக்கு இது மற்றுமொரு  சிறந்த  செயலியே! இதன்  மூலம் வேலை  தேடுவோர்  தாங்கள் இருக்கும் இடத்திற்கு அருகே உள்ள வேலைகளை  GPSயின்  உதவியுடன் தேடி பயனடையலாம்.இது பயனர்கள் கையாளச் சிறந்தாகவும் உள்ளது.
9om4s8pN
3.LinkedIn Job Search
LinkedIn Job Search ஆனது LinkedIn சமூக வளைதளத்தினால்  உருவாக்கப்பட்ட ஒரு  செயலியே.! இதன் மூலம் பயனர்கள் வெவ்வேறு தலைப்புகளின் கீழ் அதாவது  இடம் , வேலை , தகுதி  போன்றவற்றின்  கீழ்  சிறந்ததொரு தேடலகளை பெறலாம்.
 CrD8J0f6
4.Glassdoor Job Search, Salaries & Reviews
 இதன் மூலம் வேலை தேடுவோரின் வசதிக்கேற்ற   சம்பளம் மற்றும் வேலை வழங்கும் நிருவனங்களைப் பற்றிய செய்திகளை அறியலாம்.
i8Wz4PXf
5.Shine Job Search
Shine Job Search app- மூலமாக வேலை தேடுவோருக்கான மேலாண்மை மற்றும் தனிப்பட்ட செயல்முறைகளை வழங்கவுள்ளது. இதன்மூலம் அனுபவமுள்ள  மற்றும் அனுபவமில்லாத  கல்விதகுதி  படிவங்களை பொறுத்து வேலைகள்  பரிந்துரைக்கப்படுகிறது.
F96dsfP1
6.Monster Job Search
வேலை தேடுவோருக்கான   சிறந்த தேடல்களை கண்முன் வருவதில் Monster Job Search சிறந்ததொரு  முடிவுகளைத் தரவல்லது.இது பயனர்கள் கையாள  மிகச் சிறந்ததாகவும்  எளிதாகவும் உள்ளது. இதில் வேலை சமந்தப்பட்ட  தகவல்களை மின்னஜல்கள்  வழியே பெற   முடியும்.

NyAs4D0k
7.Trovit Job Search
Trovit Job Search-ஆனது 12 மொழிகளில் கிடைக்கிறது. மேலும் 46 நாடுகளிலிலுள்ள வேலைக்கான  காலி பணியிடங்களைத்   தேடி தருகிறது. இந்த பயன்பாட்டின்  மூலம்  வேலைக்கான காலியிடங்களை   சம்பளத்தின் அடிப்படையில்   பயனர்கள் பெறலாம்.
J2F56G1M

8.TimesJobs Job Search
 TimesJobs  வேலை தேடுவோருக்கு தேவையான அனைத்து அடிப்படை  சிறப்பம்சங்களையும் தரவல்லது. மேலும் பல் கல்வித் தகுதி படிவங்களையும் பயனர்களுக்கு தொகுத்து வழங்குகிறது.

n807q13e

9.Jobs by CareerBuilder
  CareerBuilder செயலியை கொண்டு வேலை தேடுவோர் அவர்களின் தகுதி மற்றும் அனுபவதிற்கேற்ற  பணிகள் பரிந்துரை செய்யப்படுகிறது. இதிலுள்ள  டிராப் பாக்ஸ் மூலமாக பயனர்கள் தங்கள் கல்வித் தகுதி படிவங்களை  செலுத்தலாம் . கூடவே உங்களுக்கு விருப்பமான சமூக வலைதளங்களில் நண்பர்களுடனும்  பகிர்ந்து  கொள்ளலாம்.

An95qsDP

10.My resume builder
 My resume builder-இல் வேலை தேடுவோருக்கு கை கொடுக்கும் விதமாக அவர்களது கல்வித்தகுதி படிவத்தை   வடிவமைத்து தருகிறது. அதனால் ஒரு கல்வித் தகுதி படிவத்தை   பத்து வித்தியாசமான கல்வித்தகுதி மாதிரிகளாக மாற்றி வழங்குகிறது. மேலும்  தகுதி வாய்ந்த வல்லுநர்களின் கல்வித்தகுதி படிவத்தை போன்று மாற்றியும் திருத்தியும்  அமைக்க  உதவுகிறது.

zk840lMY

 

You might also like

Comments are closed.