Twitterல் உங்களின் பதிவுகளின் தன்மை பற்றி தெரிந்து கொள்வதற்கு
1,607 total views
நம்முடைய டிவிட்டர் பதிவுகள் பயனுள்ளதாக சுவாரஸ்யமானதாக இருக்கின்றனவா அல்லது அலுப்பூட்டக் கூடியதாக அமைந்துள்ளனாவா என்பதை தெரிந்து கொள்ளாமல் இருந்தால் டிவிட்டரில் பெரிய அளவில் செல்வாக்கை பெறுவது சாத்தியமில்லை. அதோடு ஏற்கனவே பெற்றுள்ள பின்தொடர்பாளர்களையும் இழக்க நேரலாம். முன் அமர்ந்திருக்கும் பார்வையாளர்களை கவனிப்பதன் மூலமே பேச்சின் தாக்கம் அவர்களிடத்தே எப்படி இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள முடிவதை நல்ல பேச்சாளருக்கான இலக்கணமாக சொல்லலாம்.
சரி டிவிட்டரில் செயல்படும் போது அதற்கான வரவேற்பை கணிப்பது எப்படி? பின்தொடர்பாளர்களின் எண்ணிக்கை, மறுபதிவுகள் ஆகியவற்றை கொண்டு ஓரளவுக்கு டிவிட்டர் செல்வாக்கை ஊகிக்கலாம் என்றாலும் ஒருவரது டிவிட்டர் பதிவுகள் சுவாரஸ்யமாக அமைந்துள்ளனவா என்று எப்படி தெரிந்து கொள்வது?
இந்த கேள்வியும் மற்றவர்கள் நம்முடைய குறும்பதிவுகளை சலிப்பு தருவதாக நினைத்துவிடக்கூடாது என்ற கவலையும் உள்ள டிவிட்டராளர்களுக்கு உதவுவதற்காக என்றே அமெரிக்க ஆய்வாளர்கள் மூவர் ஒன்று சேர்ந்து ஒரு டிவிட்டர் பதிவுகள் குறித்து சக டிவிட்டராளர்களும் முன் பின் தெரியாதவர்களும் என்ன நினைக்கின்றனர் என்னும் அறிவதற்கான இணையதளத்தை அமைத்துள்ளனர். WHO GIVES A TWEET என்னும் பெயரில் அமைந்துள்ள இந்த தளம் எப்போதாவது உங்கள் டிவிட்டர் பதிவுகள் பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கின்றனர் என்று நினைத்துள்ளீர்களா என்று கேள்வி எழுப்பி உங்கள் பின்தொடர்பாளர்கள் மற்றும் இண்டெர்நெட்டிடம் இருந்து கருத்துக்களை தெரிந்து கொள்ளுங்கல் என்று அழைப்பு விடுக்கிறது. மிக எளிதாகவும் அதைவிட முக்கியமாக சுவார்ஸ்யமாகவும் இதனை சாத்தியமாக்குகிறது இந்த தளம். டிவிட்டர் பதிவுகள் எவ்வாறு எதிர்கொள்ளப்படுகின்றன என்பதை அறிய விரும்பும் டிவிட்டர் பயனாளிகள் இந்த தளத்தில் பதிவு செய்து கொண்டவுடன் முதலில் தங்கள் பங்கிற்கு பின்தொடர்பாளர்களின் டிவிட்டர் பதிவுகள் பற்றி தங்கள் கருத்துக்களை பதிவு செய்ய வேண்டும். இதன் மூலம் டிவிட்டர் பதிவுகள் எப்படி பார்க்கப்படுகின்றன என தெரிந்து கொள்ளலாம். இந்த கருத்துக்கள் டிவிட்டர் கருத்துக்கு நேரடி செய்தியாக வந்து சேரும். உங்களைப்போலவே உங்கள் நண்பர்களும் இந்த தளத்திற்கு வருகை தரும் போது அவர்கள் என்ன நினைக்கின்றனர் என்பதையும் தெரிந்து கொள்ளலாம். இணையதள முகவரி http://needle.csail.mit.edu/wgat/
Comments are closed.