FeedBurner உதவியுடன் Blogger பதிவுகளை Twitter-ல் Auto Publish செய்ய

770

 1,584 total views

Blogger வலைப் பூக்களில் கவிதை,கட்டுரை, அரசியல், திரை விமர்சனம் இப்படி அவரவர் விருப்பப்படி பதிவு எழுதி கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு பதிவரும் விரும்புவது அவர்களின் பதிவுகள் பெரும்பாலனவர்களை சென்றடைய வேண்டுமென்பதே. ஆதலால் நம் பதிவுகளை சமூக தளங்களிலும் இணைக்கிறோம். இந்த சமூக தளங்களில் பிரபலமான தளமான Twitter தளத்திலும் நம் பதிவுகளை இணைக்கிறோம். பதிவு போட்டு ஒவ்வொரு முறையும் இதில் இணைக்க வேண்டியதாக உள்ளது. இதை மாற்றி நாம் பதிவு போட்டவுடன் Twitter-ல் தானாகவே update ஆகும் படி செய்வது எவ்வாறு என இப்போது பார்ப்போம்.

பல தளங்கள் இருந்தாலும் Google-ன் தளமான பீட்பர்னரின் உதவியுடன் எப்படி ஆட்டோ publish செய்வது என பார்ப்போம்.
  • முதலில் உங்கள் பீட்பர்னர் account-ல் நுழைந்து கொள்ளுங்கள். அங்கு உள்ள உங்களின் Feed Id மீது click செய்து உள்ளே செல்லுங்கள்.
  • அடுத்து Publicize ==> Socialize என்பதை click செய்யுங்கள்.
  • இப்பொழுது உங்களுக்கு இன்னொரு பகுதி open ஆகும். அதில் உள்ள Add a Twitter Account என்பதை click செய்து உங்கள் Twitter கணக்கின் User Name கொடுக்கவும்.
  • கீழே படத்தில் உள்ளதை போல அனைத்தையும் மாற்றம் செய்யுங்கள்.

  • படத்தில் உள்ளது போல சரியாக செய்தவுடன் கீழே உங்கள் tweet Preview காட்டப்படும்.
  • அடுத்து கீழே உள்ள Activate என்பதை click செய்யுங்கள்.

  • Activate என்பதை click செய்தவுடன் இந்த வசதி ஆactivate ஆகிவிடும்.

 

You might also like

Comments are closed.