குறுந்தகவல் செயலியில் மைல் கல்லை எட்டிய பேஸ்புக் மெஸஞ்சர் ……!
590 total views
அதிவேகமாக வளர்ந்து வரும் மொபைல் செயலிகளில், பேஸ்புக் குக்கு அடுத்தபடியாக பேஸ்புக் மெஸஞ்சர் இடம்பிடித்துள்ளது. தற்போது மாதம்தோறும் இந்த செயலியை பயன்படுத்துவோர் எண்ணிக்கை 80 கோடியை எட்டியுள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. . உலகம் முழுவதும் அதிக அளவில் பயன்படுத்தப்படும் செயலி குறித்து அமெரிக்காவை சேர்ந்த நீல்சன் நிறுவனம் 13 வயதுக்கு அப்பாற்றப்பட்ட மொபைல் பயன்பாட்டாளர்களிடம் சமீபத்தில் ஆய்வு நடத்தியது. இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் ஸ்மார்ட்போன் செயலிகளில் ‘பேஸ்புக்’ கடந்த 2015-ம் ஆண்டு மீண்டும் முதலிடத்தை பிடித்தது. மாதம்தோறும் சராசரியாக இந்த செயலியை 12.6 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர். கடந்த ஆண்டை விட, இது 8 சதவீத கூடுதல் வளர்ச்சியாகும். இதே போல், வீடியோ காட்சிகளை பதிவேற்றுவது முதல் இசை, செயலிகள் டிஜிட்டல் சம்பந்தமான அனைத்து பயன்பாடுகளையும் பகிர்ந்து கொள்வதில் அதிக அளவிலான நுகர்வோரை இந்த ஆண்டு பேஸ்புக் மெஸஞ்சர் ஈர்த்துள்ளது. 2014-ம் ஆண்டை காட்டிலும், 31 சதவீத வளர்ச்சியை கடந்த ஓராண்டில் பேஸ்புக் மெஸஞ்சர் எட்டி பிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.2015-இல் மெஸஞ்சர் பயன்பாட்டில் சேர்க்கப்பட்ட பல புதிய நுட்பங்கள்தான் இவற்றிற்கு காரணமென இதன் தலைமை அதிகாரி திரு. மார்க்கஸ் கருத்து தெரிவித்துள்ளார்.மேலும் இந்த வருடத்தில் கூடுதலாக சேர்க்கவுள்ள அம்சங்களின் பட்டியல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
- பாஸ்டர் மேசெங்கிங்
- வீடியோ அழைப்புகள்
- கலந்துரையாடல்கள்
- வணிக மெஸஞ்சர்
- பணம் செலுத்துதல்
- மெஸஞ்சர் தளம்
- மெஸஞ்சர் கோரிக்கைகள்
- புகைப்பட மேஜிக்குகள்
- வெர்ச்சுவல் அச்சிஸ்டன்ட்
- உபர் மெஸஞ்சர்
இதுபோன்ற புது புது அம்சங்கள் வாட்ச் அப்,வீ சாட் ,லைன் போன்றவற்றில் காணப்படாததும் பயனர்களுக்கு புதிதானதுமாகும். இதனால் மெஸஞ்சர் செயலி இந்த வருடத்தின் இன்னும் கூடுதலாக பயனர்களைப் பெறவும் . மேலும் மற்ற குறுந்தகவல் செயலிகளுக்கு போட்டியாக அமையவும் வாய்ப்புகள் உண்டு. மேலும் 2016-க்குள் இந்த செயலியை ஒரு சாதாரண குறுந்தகவல் செயலியைப் போலல்லாமல் அதனை வணிகம் சமந்தப்பட்ட உரையாடல்கள் மற்றும் சந்திப்புகளுக்கு ஏற்ற சிறந்ததொரு செயலியாக மாற்றும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதனால் மெஸஞ்சர் செயலியை இனி பொழுதுபோக்காக மட்டுமல்லாமல் வணிகம் சமந்தப்பட்ட செயல்களுக்காகவும் பயன்படுத்த வாய்ப்புகள் உருவாகலாம்.
Comments are closed.