இந்தியாவிற்கு அறிமுகபடுத்தவுள்ள டின்டரின் தலைமை அதிகாரியாக திரு.தரு கபூர் நியமனம்:

456

 592 total views

               Tinder  என்பது ஒரு  அமெரிக்காவின் டேட்டிங் சார்ந்த ஒரு  செயலியாகும்.  தற்போது டிண்டரை  முதல் முறையாக    அமெரிக்காவை விடுத்து  உலக நாடுகளுக்கும்  அறிமுகபடுத்த உள்ளனர். இந்தியாவைப் பொறுத்த வரையில் இதனுடைய  முழு பொறுப்பைதிரு.தரு கபூர்    ஏற்றுள்ளார் .Tinder என்பது ஒரு ஆன்லைன் சமந்தப்பட்ட டேட்டிங் ஆப் ஆகும். அதாவது  உலகளாவிய முறையில் மக்களை ஒன்றிணைக்கும் ஒரு  குறுந்தகவல் சமந்தப்பட்ட சமூக வலைதளமே ! இதன் மூலம் பல உறவுகளையும் தோழமையையும் , நட்புணர்வையும், வளர்த்துக் கொள்ளவும், பிடித்தவர்களை   சந்திக்கவும் முடியும். மேலும்  நீங்கள் விரும்பாத நபர்களிடமிருந்து வரும் குறுந்தகவலை தடுக்கவும் வாய்ப்புகள் அளிக்கப்பட்டுள்ளது.2012-இல் அறிமுகப்டுத்தப்பட்ட Tinder 196 நாடுகளில்  இயங்கி வந்தது. இப்போதைக்கு ஒவ்வொரு நாளும் 26 மில்லியன் பொருத்தங்களை  சேர்த்து வைத்துள்ளது. இன்று வரை பத்து பில்லியன் பொருத்தங்களை அமைத்து கொடுத்துள்ளது.
  உள்ளூர் பயனர்களின் தேவைகளுக்கேற்ப இதனை உருவாக்க திட்டமிட்டுள்ளனர். தரு கபூர் போன்ற இந்திய பங்கு சந்தையைப் பற்றிய பேரார்வம் கொண்டவரின் கையில்  இத்திட்டம்    வரவிருப்பதால்  2016-இல்  Tinder இளம் வயது கொண்ட பயனர்களிடையே   பெரும் மாற்றத்தை ஏற்படுத்த உள்ளது.
 ஏனெனில்    தரு கபூர்  வணிக வளர்ச்சி சமந்தப்ட்ட வேலைகளில் பரந்த அனுபவம்  கொண்டவர்.  மேலும் புது புது தயாரிப்புகள் , ப்ராடக்டுகள் போன்றவற்றை  அறிமுகபடுத்துவதிலும் அதன் வளர்ச்சியை உச்சத்துக்கு  கொண்டு வருவதிலும்  திறமை வாய்ந்தவர். மேலும் இதற்கு முன்   The Boston Consulting Group மற்றும்  Sequoia Capital India போன்ற நிருவனங்களில்  வேலை செய்தவர் என்பதும்  குறிப்பிடத்தக்கது.

You might also like

Comments are closed.