கால் டிராப் விவகாரத்தில் வாடிக்கையாளர்களிடமிருந்து பணத்தை திருட முயற்சிக்கும் டெலிகாம் நிறுவனங்கள்:

448

 587 total views

மொபைல் போனில் பேசிக்கொண்டு இருக்கும் போது ஏற்படும் சில தொழில்நுட்ப காரணங்களால் அழைப்பு தடைப்படுவது தான் கால் டிராப்.   சமீபத்தில் இது போன்ற பிரச்சினைகள் அதிக அளவில் ஏற்பட்டுள்ளதால் இதனை குறைக்கும் பொருட்டு டிராய் நடவடிக்கை எடுத்துள்ளதுஇது போல   தடைபடும்  ஒவ்வொறு  அழைப்புக்கும்  ஒரு ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்  என்றும் மேலும் அதிகபட்சமாக   நாள் ஒன்றுக்கு  மூன்று ரூபாய்  என  விதிக்கபடிருந்தது.இதை ஜனவரி 1ம் தேதி முதல் அமல்படுத்த வேண்டும் என்று டிராய் உத்தரவிட்டது. மேலும் இது போன்ற சலுகைகள் அமலுக்கு வந்தால் 1,000 முதல் 1,500 கோடி ரூபாய் வரையிலான வருமானத்தை இழக்க வேண்டியிருக்கும் .  மேலும் இணைப்புத் தடைப்படாமல் 100 சதவீதம் சேவை வழங்குவது என்பது  சாத்தியமில்லை என்று ரிலையன்ஸ்ஏர்டெல்வோடபோன்  போன்ற  21 நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் டெலிகாம் சார்ந்த நிறுவனங்கள் கடந்த ஒரு வருடத்தில் சுமார் 15,000க்கும் மேற்பட்ட டெலிகாம் டவர்களை நிறுவியதன்  காரணமாக  பங்குச்சந்தையில் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் பங்குகள் சுமார் 3 சதவீதம் வரை சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை எதிர்த்து இந்திய தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் சங்கம் மற்றும் இந்திய செல்லுலார் நிறுவனங்கள் சங்கம் சார்பில் டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதுஉட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பல சிக்கல்களை சந்திக்க வேண்டியுள்ளதுஇதை கருத்தில் கொள்ளாமலேயே இழப்பீடு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு போதுமான அலைவரிசை  மற்றும்  டவர்கள்   இல்லாததால்  இதுவே கால் டிராப் ஏற்படுவதற்கு காரணமென்றும் இதனால்  இந்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கவேண்டும் என்று மொபைல் நிறுவனங்கள் சார்பில் நீதிமன்றத்தில் கேட்டுக்கொண்டதற்கினங்க  இடைக்கால தடை விதிக்க மறுத்த உயர் நீதிமன்றம், வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை ஜனவரி 6ம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டதுஅதுவரை இந்த விவகாரத்தில் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட மாட்டாது என டிராய் உறுதி  கூறியிருந்தது. இதனை  சமாளிக்க  டெலிகாம் நிறுவனங்கள் மக்களை   ஏமாற்றி  பணம் பறித்து அவர்களுக்கே தரும் எண்ணத்தில் உள்ளனர். அதாவது இந்த அபராதம் அமலுக்கு வருமானால் மொபைல் நெட்வொர்க்குகள் அதன் இழபீட்டை ஈடு செய்யும் வகையில் சந்தாதாரர்களின் குரல் மற்றும் டேட்டா திட்டங்களை அதிகபடுத்தும்  எண்ணத்தில் உள்ளதாக எச்சரித்துள்ளனர். அபராதம் ஒரு பகுதியாக இருக்கும் பட்சத்தில்  தீர்வைகள் சம்மந்தப்பட்ட    கட்டணங்கள்  அதிகரிக்க வாய்ப்புள்ளது.   

You might also like

Comments are closed.