1,121 total views
நாளை காலை சூரியக் குடும்பத்திலுள்ள சூரியனை சுற்றி வலம் வரும் ஒன்பது கோள்களில் ஐந்து கோள்கள் நேர்கோட்டில் சந்திக்க உள்ளன. சூரிய குடும்பத்தில் ஒன்பது கோள்களும் அதனதன் வட்டப்பாதையில் சூரியனை சுற்றி வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் ஒவ்வொரு கோள்களின் சுற்றுக் காலங்களும் வெவ்வேறாக இருந்த போதிலும் குறிப்பிட்ட ஐந்து கோள்கள் மட்டும் தற்போது ஒரே நேர்கோட்டில் சந்திக்க உள்ளன. புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன், மற்றும் சனி ஆகிய ஐந்து கோள்களும் ஜனவரி 20இல் தொடங்கி பிப்ரவரி 20 வரை ஏறக்குறைய ஒரு மாதங்களுக்கு கண்களுக்கு புலப்படும். இதுபோன்றே இதற்கு முன் 11 ஆண்டுகளுக்கு முன் 2005இல் நிகழ்ந்தது.
இந்த பெருமாற்றத்தையொட்டி, நாளை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நெப்டியூன் மற்றும் புளூட்டோ போன்ற கோள்கள் சூரியனுக்கு வெகு தொலைவில் இருப்பதால் அவற்றை தொலைநோக்கியின் வழியாக மட்டுமே பார்க்க முடியும். வெறுங்கண்களால் காண முடியாது. நாளை ஐந்து கோள்களையும் சூரிய உதயத்திற்கு முன் வெறுங்கண்களால் காணலாம். மேலும் இதேபோன்ற காட்சியை ஆகஸ்டு மாதம் மீண்டும் நடைபெறவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.ஆகையால் மறுநாள் விடியற்காலையில் ஐந்து கோள்களும் உங்களின் விடியலைத் துவக்கி வைக்கும். வியாழன் மாலையில் உதயமாகத் தொடங்கிய பின் அதைத் தொடர்ந்து நள்ளிரவில் செவ்வாய் உதயமாகத் துவங்கும் பின் வரிசையாக சனி, வெள்ளி, புதன் என மற்ற மூன்று கோள்களையும் காணலாம். இவ்வாறாக நாளை 5 கோள்களையும் காணும் அரிய வாய்ப்பைப் பெறலாம்.
Comments are closed.