இந்த ரோபோக்கள் உங்களை புற்று நோயிலிருந்து காக்கும் !

413

 1,039 total views

          ஜப்பானில்  எரிபொருள் ஒழிக்கும் அமைப்பான (FRS) தனித்துவமிக்க சிறப்பாக வடிவமைக்கப்பட்ட ரோபோக்களை தயார் செய்துள்ளது. இந்த சிறப்பு வடிவ ரோபோக்கள்  அணு உலையில் வெளியாகும் மனிதர்களுக்கு தீங்கிழைக்கும்  கதிர்வீச்சுகளிலிருந்து  காத்துக் கொள்ளுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. இது புகுஷிமா அணுக்கரு உலை தயாரிப்பில்  அங்கு பணி புரியும் பணியாளர்களை  கதிர் வீச்சுகளிலிருந்து பாதுகாக்கும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது.  இந்த அணுக்கரு உலை முழுவதுமாக தயாராக  30முதல் 40 ஆண்டுகள் வரை ஆகும். இந்நிலையில்  அணு உலையின் 3 ஆம் பாகத்தின் தயாரிப்பின் போது உண்டாகும் குப்பைகள் மற்றும்  உலோக கழிவுகள் போன்றவற்றை  அப்புறப்படுத்த மனிதர்களை புகுத்தாமல் அதற்கு பதிலாக ரோபோக்களை சுத்தம் செய்ய டோஷிபா நிருவனம்  வழி  செய்துள்ளது.
         திங்களன்று டோஷிபா நிறுவனம் மிகப்பெரிய ரிமோட் கண்ட்ரோலுடன் கூடிய எந்திர ரோபோ ஒன்றினை அறிமுகப்படுத்தினர். அவை முறையே  இரண்டு கைகளைக் கொண்ட மிகப்பெரிய “கிரேன்” போன்ற தோற்றத்தினைக் கொண்டுள்ளது. அதில் ஒரு கையினைக் கொண்டு உலோகங்களைக் கெட்டியாக பிடித்துக்  கொள்ளவும்  மற்றறொரு கையினால் அதனை வெட்டவும் பயன்படுத்தப்படுகிறது.மேலும்  நீறுக்கடியிலுள்ள உலோக குப்பைகளை நீக்குகிறது. இந்த இயந்திரம் பற்பல கேமராக்களின் உதவியுடன்  கண்காணிக்கப்படுகிறது.

http://https://youtu.be/y43bsJ7g7Gk

2011-இல் ஜப்பானில் ஏற்பட்ட சுனாமி போன்ற இயற்கை பேரிடரால் நீரில் மூழ்கிய பல உலோகங்களை  அதன் அதீத கதிர் வீச்சு தன்மையின் காரணமாக   பணியாளர்களால்  மீட்க முடியாமல் போனது. இதுபோன்ற சூழ்நிலைகளை தவிர்க்கும் வண்ணம் இந்த ரோபோ  நீரில் மூழ்கி இருக்கும் உலோகங்கள் சார்ந்த குப்பைகளை அப்புறப்படுத்தவல்லது.

           1986-ஆம் ஆண்டு நடந்த புகிஷிமாவின் அணுக்கரு உலை வெடிப்பு போன்ற  சம்பவங்களால்  பல கோடிக்கணக்கான பொருள் சேதம் மற்றும்  உயிர் சேதம் ஏற்பட்ட நிலையில் அதன் கதிர்வீச்சுகளால் பலர் புற்று நோய் பாதிப்பிற்கு  உள்ளானார்கள். இனி மீண்டும் இதுபோன்ற கொடூர சம்பவங்கள் எப்போதும் நடக்காமல் காக்க  இது போன்ற  எந்திர ரோபோ கண்டிப்பாக கை கொடுக்கும். மேலும் இந்த ரோபோவை அருகிலிருந்து இயக்க வேண்டிய அவசியமில்லை. அணுக்கரு உலைக்கு பக்கத்திலுள்ள  மற்றொரு  கட்டிடத்திலிருந்தே மிகச் சிறந்த வல்லநர்களால் தனியாக இயக்கப்படுகின்றன. அதனால்  தீங்கிழைக்கும் கதிர்வீச்சுகள் மனிதர்களை நெருங்காத வண்ணம் பார்த்துக் கொள்ளப்படுகிறது.மேலும் திடீரென ஏற்படும்  அசம்பாவிதங்களால் மனிதர்களுக்கு தீங்கு ஏற்படாமல்  தவிர்க்கவும் கதிர்வீச்சுகள் நிறைந்த இடங்களிலிருந்து மனித உயிர்களை காக்கவும் பயன்படுகிறது.  இதுபோன்ற எந்திரங்கள் மிகச் சிறிய அளவில்  அமைக்கப்பட்டால்  நம் நாட்டில் அபாயகரமான ஆபத்து விளைவிக்கும்  வெடி மருந்துகள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு கை கொடுக்கும் வகையில் அமையலாம். இதன் வழியாக தீ விபத்துகளை கணிசமாக குறைக்கலாம்.

You might also like

Comments are closed.