GIF இனி எங்கும் எதிலும் காண….
1,310 total views
Giphy என்று கூறப்படுகின்ற Graphics Interchange Format நுட்பத்தினை இனி எங்கும் எதிலும் சேர்க்கலாம். ஆம் GIF என்று சொல்லப்படுகின்ற வகை ஒருவகை நகருவதனை போன்ற தோற்றம் கொண்ட புகைப்படத்தினை சிலகாலாமாகவே பேஸ்புக், டுவிட்டர், போன்ற சமூக வலைதளங்களில் சேர்க்கப்பட்டு வந்தது. தற்போது இதற்காக தனியாக ஒரு கீ போர்டையே அறிமுகபடுத்தியுள்ளனர். இதனால் எதில் வேண்டுமானாலும் இனி GIF புகைப்படத்தை சேர்த்துக் கொள்ளலாம். தேடு பொறிகளிலும் கூட சேர்த்து இணையத்தில் பயன்படுத்தலாம். எப்படி சாதாரண புகைப்படங்களை தேடுகிறோமோ அதே போல் இனி gif புகைப்படங்களையும் சேர்த்து தேடலாம். எந்த ஒரு இடத்திலும் gif பட்டனை அழுத்தி சேர்த்து அனுப்பலாம். மேலும் இதன் மூலம் கூடுதல் பலனாக மொபைலில் நாம் டைப் செய்யும் எந்த ஒரு வாகியத்தினையும் gif புகைப்படமாக மாற்றிக் கொள்ளும் வசதியும் உள்ளது. இது தகவல் தொழில் நுட்பத்தின் படிப்படியான முன்னேற்றத்தை காட்டுவதாகவே உள்ளது. இது முதலில் ios போன்களில் முதலில் அறிமுகபடுத்தப்பட உள்ளது. அதன் பின் ஆன்றாய்டு பயனர்களுக்கும் பயன்படுத்தும்படி செய்யப்படும் என இக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Comments are closed.