விவசாயம் செய்யும் ரோபோக்கள் :

613

 963 total views

உணவுத் துறையில் சாதனை செய்யும் விதமாக நவீன மென் பொருள் மற்றும் வன் பொருள்களின் உதவியுடன்   விவசாயம் செய்யும் ரோபோக்களை  தயாரித்துள்ளனர்  ஃபார்ம் போட்  நிருவனத்தினர் . இதன் மூலம்  விவசாயத்தை  நவீன முறையில் கையாள தயாராக்கி வருகின்றனர்.   ஃபார்ம் போட்டை உபயோகிப்பதன் மூலம் உங்கள் வீட்டின் முன்னோ அல்லது தோட்டத்திலோ  விருப்பமான பயிர்களை வளர்க்கலாம்.
index
  ஃபார்ம் போட் ரோபோட்டுகள் :
திடமான மற்றும் மெல்லிய  உருவம் கொண்ட   அலுமினியத்தால் உருவாக்கப்பட்டுள்ள சாதனத்தில்   5மிமீ தடித்த  தகடுகளுடன்  இணைத்து கட்டப்பட்டுள்ளது. மற்றும் சக்தி வாய்ந்த NEMA -17  ஸ்டெப்பர் மோட்டார்களுடன் இணைந்து, மில்லி மீட்டர் துல்லியம் கொண்ட XYZ  திசையில்   கட்டப்பட்டு உள்ளது.  கூடவே  இதர பாகங்களான  சென்சார்கள் , விதை செலுத்திகள், துளைக்கும் கருவிகள் மற்றும் சில பாகங்களும்   அடங்கும். இந்த கருவிகள் அனைத்தும் மின் இணைப்பினை நாடாமல்  காந்தத் தன்மையுடன் ஒன்றையொன்று  இணைத்துள்ளது.அதனால் செய்யபோகும் வேலைக்கேற்ற தேவையான கருவிகளை  தானாகவே தேர்ந்தேடுத்து பயனபடுத்தக்  கூடியது. சரியான அளவு மற்று காலநிலை போன்றவற்றில்  பயிர்களை வளர்க்ககூடியது.
   இந்த மாதிரியான நவீன நுட்பங்களை விவசாயத்தில் செலுத்தியது  உண்மையில் பாராட்டிற்குறியதே!  இதனால் விவசாயத் துறையில் ஒரு மேம்பட்ட வளர்ச்சியினைக்  காணும் வாய்ப்புகள் உள்ளது.   எதிர்காலத்தில் இதுபோன்ற கருவிகள் அதிக அளவிலாளான பயிர்களை வளர்க்கும் நுட்பங்களையோ  அல்லது விவசாயப்  பண்ணைகள் போன்ற அமைப்பில்  பயிர்களை வளர்க்கவோ  வழிவகுக்கும். மேலும் தேனீ, மண்புழு  போன்ற வளர்ப்புகளையும் அழிந்து வரும் உயிரனங்களையும்  வளர்க்கவோ வழி வகுக்கும்.
       ஃபார்ம் போட்டின் இந்த முயற்சி விவசாயத்தினை பொருத்தவரையில்   முதலாவது  தயாரிப்பே, என்றாலும்   இவை ஒரு  டிராக்டர்கள் செய்யும் வேலையினை செய்து விடும் அளவிற்கு திறன் வாய்ந்தது. மேலும்  இந்த ரோபோக்கள் கூடிய விரைவில்  கிக்சஸ்டாட்டருக்குள் நுழைந்தவுடன் அதன் முன்பதிவுகளை  பெறலாம்.

You might also like

Comments are closed.