722 total views
மிதிவண்டிகளை பயன்படுத்துபவர்களிடம் உங்களது வாகனத்திற்கு எந்த தேவைக்காக அதிகம் செலவிடுகுறீர்கள் என்று கேட்டால் அவர்களை பொறுத்தவரையில் காற்று நிரப்புவதைதான் கூறுவார்கள் . அந்த காற்றினையும் தானாகவே ஏற்றிக் கொள்ளும் நுட்பத்தை ஒரு வருடத்திற்கு முன்னரே பம்ப் டையர் நிருவனத்தினர் தொடங்கியிருந்தனர் என்பது அனைவரும் அறிந்ததே! தற்போது அதே யுக்தியை பைக்குகளிலும் அறிமுகபடுத்த உள்ளனர் . இதனால் அடிக்கடி காற்றினை நிரப்பிக் கொள்ளும் அவசியமில்லை.
எப்படி தானாகவே நிரப்பிக் கொள்ளும்?
எப்படி தானாகவே நிரப்பிக் கொள்ளும்?
டயர்களின் வால்வுகளில் காற்றினை நிரப்ப வெளிப்புறம் உள்ள வால்வுகளில் காற்றானது நிரப்பப்படும் போதுமான அளவு காற்று நிரம்பியவுடன் காற்று நிரப்படுவதை நிறுத்திக் கொள்ளும். இதனால் வாகனங்களில் காற்றை நிரப்ப உங்கள் கைகளை அழுக்காக்கி கொள்ளும் அவசியம் இருக்காது. மேலும் தேவையான அளவிற்கு காற்றினை உயர்த்தியும் குறைத்தும் கொள்ளலாம்.அப்படியானால் அடிக்கடி காற்றினை நிரப்பிக் கொள்வது என்பது அவசியமில்லை. பெஞ்சமின் பிராங்கிளின் இதனை அடுத்த வருடத்தில் கிக்ஸ்டாட்டரில் செலுத்த திட்டமிட்டுள்ளார். இந்த ஒரு சாதனத்தின் விலையினை $30 முதல் $55 வரை இருக்கலாம் என நிர்ணயித்துள்ளனர். தானாகவே காற்றினை நிரப்பிக் கொள்ளும் யுக்தி என்பது இதற்கு முன்னரே மிதிவண்டிகளில் பயன்படுத்தப்பட்டது. தற்போது அதே நுட்பத்தை பைக்குகளில் 700cமற்றும் 26-அங்குலம் கொண்ட டயர்களுக்கு பொருந்தும்படி அமைக்க உள்ளனர்.
Comments are closed.