பேஸ்புக்கில் உங்கள் நண்பர்கள் பட்டியலில் பொய்யான நண்பர்களை எப்படி கண்டறிவது?
5,990 total views
என்னதான் பேச்புக்கின் பிரண்ட்ஸ் லிஸ்ட்டில் உங்களுடன் பலர் தொடர்பிலிருந்தாலும் அவர்கள் யாவரும் உங்கள் உண்மையான நண்பர்கள் இல்லை.பேஸ்புக்கில் இருக்கும் உங்கள் நண்பர்களில் முக்கால்வாசி பேர் பொய்யானவர்களே! என ஒரு ஆய்வு தெரிவிக்கிறது . மனிதவியல் ஆராய்ச்சி நிபுணர்கள் நடத்திய சமீபத்திய ஆய்வின் படி பேஸ்புக்கில் நாம் பழகும் நண்பர்கள் அனைவரும் நேரில் பார்க்காதவர்களே அவர்களில் எத்தனை பேர் உண்மையான நண்பர்கள் எத்தனை பேர் உண்மையாகவே ஒரு நண்பருக்காக நினைத்து கவலைப்படுகிறார்கள் என்ற ஆராய்ச்சியை நடத்தியது. சமூக வலைதள நண்பர்களுக்கும் உண்மையில் நாம் நேரில் பார்த்து பழகும் நண்பர்களுக்கும் இருக்கும் வேறுபாட்டை இந்த கருத்துக் கணிப்பு வெளிக்கொண்டுவந்துள்ளது. பிரிட்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக பேராசிரியர் ராபின் டன்பர் பேஸ்புக் நண்பர்கள் பற்றிய ஆய்வை மேற்கொண்டதில் கிடைத்த தகவல்களின் படி பேஸ்புக்கில் இருக்கும் 150 நண்பர்களில் 15 நண்பர்கள் மட்டுமே உங்களுக்கு தெரிந்த நண்பர்கள் அதில் உங்களைப் பற்றி கவலைப்படுபவர்கள் 5 பேர் மட்டுமே! மற்றும் உங்கள் நண்பர் பட்டியலில் 27 சதவிகிதம் மட்டுமே உண்மையானவர்கள் என்ற தகவலை அளித்துள்ளார்.

Comments are closed.