Facebook Timelineல் புதிய மாற்றங்கள் வரப் போகின்றன

644

 1,874 total views

தினமும் கண்ணாடி பார்த்து தலை சீவுவது போல், தினமும் Facebook பார்ப்பது நம் வாழ்வின் ஒரு அங்கம்.  இது வரை இரண்டு முறை Profile பக்கம் மறு வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது.

கடந்த முறை Timeline என புதிய வகைப் பக்கம் அறிமுகப் படுத்தப்பட்ட போது மக்கள் பெரும் அதிருப்தியில் இருந்தனர். அப்றோம் கொஞ்சம் கொஞ்சமா பழகிப் போய்விட்டது.

இந்த முறை வரவிருக்கும் மாற்றங்கள்.

1.  Subscribers எனும் சொல் “Followers” என மாறும்.
2. Timeline பொதுவாக வலது , இடது என இரண்டு பக்கமும் நிலைத் தகவல்கள் இருக்கும். இப்போது இடது பக்கம் மட்டும் நிலைத் தகவல்கள். வலது பக்கம் Profile Info & Added Photos இருக்கும்.
வலது பக்கம் இருக்கும் தகவல்கள் ஒரு அளவு Scroll செய்தவுடன் முடிந்து போகும். ஆனால் இடது பக்கம் உள்ள தகவல்கள் வந்து கொண்டே இருக்கும்.

3. ஒரு நண்பரின் புகைப்படங்களைப் பார்க்கும் போதும் அவரின் Profile Info  மேல் ஓரத்தில் தெரிந்துகொண்டே இருக்கும்.

இந்த முறை செய்யப்படும் மாற்றங்கள் Timeline பயன்படுத்துவதை எளிமைப் படுத்தும் நோக்கில் வரவுள்ளன. விரைவில் உங்களின் facebook profile timeline ல் இந்த மாற்றங்களைக் காணலாம்.Blog

You might also like

Comments are closed.