ஆளில்லா விமானங்களுக்கான முதல் விமான நிலையம்:
546 total views
வளர்ந்து வரும் ஆளில்லா விமானத் துறையின் வணிக மற்றும் வர்த்தகப் பயன்பாடுகளை ஊக்குவிக்கும் வண்ணம் அதற்கான ஆராய்ச்சித் தளங்களை அமைக்க அலாஸ்கா, நெவாடா, நியூயார்க், வடக்கு டகோடா, டெக்சாஸ் மற்றும் வர்ஜீனியா ஆகிய ஆறு மாகாணங்களுக்கு அமெரிக்க அரசு கடந்த வாரம் உறுதியளித்திருந்தது. இத்திட்டத்தின் மூலம் ஆளில்லா விமானத்தை இயக்கவும் மற்றும் அதன் உள் கட்டமைப்புகளை பற்றிய விவரங்களை அறியவும் வழி செய்யப்படுகிறது. ஆளில்லா விமானங்களின் எண்ணிக்கை அதிகமாகும்போது அதற்கான நிலையங்களை உருவாக்குவதென்பது அத்தியவசியாமான ஒன்றாக அமைகிறது. இதன் முதற்கட்டமாக நெவாடா நகரில் ஆளில்லா விமானங்களுக்கான விமான நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது.

நெவாடா :
தற்போது நெவாடாவில் ஆளில்லா விமானங்களுக்கான நிலையமாக Eldorado Droneport என்ற பெயரில் ஆளில்லலா விமான நிலையங்கள் அமைக்கபட்டுள்ளன. இதுதான் உலகின் முதல் ஆளில்லா விமானத்திற்கான முதல் விமான நிலையமாகும். இது மத்திய விமான போக்குவரத்து நிர்வாகத்தினால் அங்கீகரிக்கபட்ட தளங்களில் ஒன்றே! இங்கு ஆளில்லா விமானத்தினை எவ்வாறு இயக்குதல் மற்றும் அதன் பராமரிப்பு மற்றும் பிற ஆதரவு பற்றிய செயல்பாடுகள் அளிக்கபட்டு வருகின்றன. மேலும் ட்ரோன் விமானிகளுக்கான ட்ரோன் பந்தய பொழுதுபோக்கு உள்ளிட்ட அனைத்தையும் கற்றுத் தருகின்றன. மூன்று ஆண்டுகளுக்குள் விமான நிலையத்தின் கட்டுமான பணிகளை முடிக்க வேண்டும் என இக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இதுவரை ராணுவ துறையில் மட்டுமே பயன்படுத்தி கொண்டு வந்த ஆளில்லா விமானங்களை தற்போது வணிகம் சம்ந்தப்பட்ட துறைகளிலும் பயன்படுத்த உள்ளதால் அதிகப்படியான வேலை வாய்ப்புகள் கிடைக்க வாய்ப்புகள் உள்ளன. இந்த விமானங்களுக்கான கட்டுப்பாடுகளைத் தளர்த்தும்போது 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் முதல் மூன்று ஆண்டுகளுக்குள் உருவாகும் என்றும், இத்தகைய விமானங்களை இயக்கக்கூடியவர்களுக்கு 85 ஆயிரம் முதல் 1,15,000 டாலர் வரை ஊதியம் கிட்டக்கூடும் என்றும் தொழில்துறை ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது.
Comments are closed.